ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இஸ்ரோவில் 526 காலிப்பணியிடங்கள் - டிகிரி படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

இஸ்ரோவில் 526 காலிப்பணியிடங்கள் - டிகிரி படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

இஸ்ரோ

இஸ்ரோ

ISRO Recruitment : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள 526 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 526 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
உதவியாளர்342
ஜீனியர் தனி உதவியாளர்154
மேல் பிரிவு கிளர்க்16
ஸ்டெனோகிராஃபர்ஸ்14

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 09.01.2023 படி 28 வயது வரை இருக்க வேண்டும். OBC 31 வயது மற்றும் SC/ST 33 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

இஸ்ரோவில் இந்த பணிகளுக்கு ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

உதவியாளர், மேல் பிரிவு கிளர்க் பணிகளுக்கு ஏதேனும் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் கணினி திறன்.

ஜீனியர் தனி உதவியாளர் மற்றும் ஸ்டெனோகிராஃபர்ஸ் பணிகளுக்கு 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு அல்லது வணிகம்/ செயலக நடைமுறை ஆகிய பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ மற்றும் 1 வருட ஸ்டெனோகிராஃபர்ஸ் அனுபவம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடைபெறும். இட ஓதுக்கீடு அடிப்படையில் எழுத்துத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் விதம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். அதனைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்குத் திறன் தேர்வு நடத்தப்படும்.

Also Read : கல்வி தகுதியில் மாற்றம்... கால அவகாசம் நீட்டிப்பு : TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://apps.ursc.gov.in/

முக்கிய நாட்கள் :

விண்ணப்பம் தொடங்கிய நாள் : 20.12.2022

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 09.01.2023

கட்டணம் செலுத்தக் கடைசி நாள் : 11.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, ISRO, Jobs