இஸ்ரோ (ISRO) நிறுவனத்தில் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு!

இஸ்ரோ நிறுவனத்தில் விஞ்ஞானி/ இன்ஜினியர் பணியின் கீழ் சிவில், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இஸ்ரோ (ISRO) நிறுவனத்தில் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு!
இஸ்ரோ
  • News18
  • Last Updated: December 27, 2018, 4:35 PM IST
  • Share this:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ -  ISRO) நிறுவனத்தில் விஞ்ஞானி, பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இஸ்ரோ நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் விஞ்ஞானி/ இன்ஜினியர் பணியின் கீழ் சிவில், எலக்ட்ரிக்கல், ரெஃப்ரிஜெரேஷன் & ஏர் கன்டிஷனிங், ஆர்க்கிடெக்சர் பிரிவுகளில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வயது வரம்பு: 2019 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி விண்ணப்பதாரர்கள் 35 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: குறிப்பிட்ட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் பி.இ.,/ பி.டெக். படிப்பில் குறைந்தது 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 15, 2019. மேலும் விவரங்களுக்கு https://www.isro.gov.in/sites/default/files/bilingual_advt_for_website1.pdf, www.isro.gov.in, https://apps.isac.gov.in/ced-2019/advt.jsp என்ற வலைதளத்தில் பார்க்கவும்.

Also watch
First published: December 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading