ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய அஞ்சலக வங்கியில் 650 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்திய அஞ்சலக வங்கியில் 650 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்திய அஞ்சல் துறை

இந்திய அஞ்சல் துறை

இப்பணிக்கான பணியாணை 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய அஞ்சலகக் கட்டண வங்கியில் (IPPB) அதிகாரம் சார்ந்த (Exective) பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது.  இந்திய  அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 650

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குறிய  கடைசி நாள் : இன்று (20 may 2022).

ரூ.750 தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதி நாளிற்குள் செலுத்த வேண்டும்.

எழுத்துத் தேர்வு:  எழுத்துத் தேர்வு உத்தேசமாக ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பித்த  7 நாட்கள் பின்பாக,  வலைதளத்தில் மின்னணு – தேர்வு அனுமதிச்சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம்.  இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும்.

ஊதியம்:  இதர படிகளும் சேர்த்து மொத்த ஊதியம் தோராயமாக மாதத்திற்கு ரூ.30,000 ஆக இருக்கும்

வயது வரம்பு: 2022 ஏப்ரல் 30 அன்றுள்ளபடி, விண்ணப்பதாரர் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும்,30 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10, +2 கல்வி முறையில் அல்லது இதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும்,  பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது, 2 ஆண்டுகள் கிராம அஞ்சல் பணியாளராக பணி செய்திருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்படும்.

இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும். 2 ஆண்டுகளுக்கு பின்பாக, தேர்வர்களின் செயல்திறன் அடிப்படையில்,  பணியானது 1 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.

SSC Tier 1 Exam: எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த மேல்நிலை தேர்வு வரும் 24ம் தேதி தொடங்குகிறது

விண்ணப்பம் செய்வது எப்படி:

விண்ணப்பதாரர்கள், http://www.ippbonline.com/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், பான் எண், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை , மாணவர் அடையாள அட்டை என மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணலின் போது, பதிவேற்றம் செய்த அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும்.

UPSC: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது - முழு விபரம் இதோ

வேண்டுகோள்: இன்றே கடைசி நாள் என்பதால்,  விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

First published:

Tags: India post