பிரபல பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL) ஜூனியர் ஆபரேட்டர் (Junior Operator (Aviation)) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை கேட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜூலை 29, 2022 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த இணையதளத்தில் Career’s என்ற ஆப்ஷனை கிளிக் செய்து வேலைக்கான அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
IOCL நிறுவனத்தில் தென் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 39 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 28 இடங்களும், கர்நாடகாவில் 6 இடங்களும், தெலங்கானாவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.
IOCL ஆட்சேர்ப்பு 2022: ஜூனியர் ஆபரேட்டர் பதவிக்கான தகுதி :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பொது, EWS மற்றும் ஓபிசி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களுடனும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் வட்டார போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தை (heavy driving license) வைத்திருக்க வேண்டும்
IOCL ஆட்சேர்ப்புக்கான முக்கியமான தேதிகள் பின்வருமாறு;
ஜீலை 9ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்குகிறது. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 29 ஜீலை என IOCL தெரிவித்துள்ளது. எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், செப்டம்பர் 6 ம் தேதியில் எழுத்துத் தேர்விற்கு பட்டியலிடப்பட்ட(shortlisted) விண்ணப்பதாரர்களின் முடிவுகள் பதிவேற்றப்படலாம் எனவும், செப்டம்பர் 20 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் சரிபார்த்து, sppt ஓட்டுநர் சோதனை நடைபெறும். இதன் பிறகு இறுதி முடிவு தோராயமாக செப்டம்பர் 14ம் தேதி பதிவேற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு;
விண்ணப்பதாரர் 18 வயது முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்;
பொது, EWS மற்றும் OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் 150 ரூபாய் ஆகும். எஸ்சி, எஸ்டி, PWD மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை;
தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு (ஓட்டுநர் தேர்வு) (Written Test and Skill Proficiency Physical Test (Driving Test)) ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
எழுத்துத் தேர்வானது 100 objective கேள்விகளைக் கொண்டிருக்கும் மேலும், தேர்வு காலம் 90 நிமிடங்கள் இருக்கும்.
ஆயில் இந்தியா லிமிடெட் இணையதள முகவரி
https://iocl.com/
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள பக்கம்
https://ioclsrmd.onlinereg.in/skandhareg22/Home.aspx
இந்த லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.23 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.78 ஆயிரமும் சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் திறமை, உடல்தகுதி தேர்வு மூலம் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.