இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (IOCL) 523 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி!

தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் மொத்தம் 523 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டிரேடு அப்பரன்டிஸ் பணிக்கு 228 இடங்களும், டெக்னீசியன் அப்பரன்டிஸ் பணிக்கு 295 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Web Desk | news18
Updated: November 14, 2018, 8:34 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (IOCL) 523 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி!
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணி
Web Desk | news18
Updated: November 14, 2018, 8:34 PM IST
நாட்டின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 523 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தின் வடக்கு மண்டல மார்க்கெட்டிங் பிரிவில் அப்பரன்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் மொத்தம் 523 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டிரேடு அப்பரன்டிஸ் பணிக்கு 228 இடங்களும், டெக்னீசியன் அப்பரன்டிஸ் பணிக்கு 295 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு: 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் டிரேடு அப்பரன்டிஸ் பணிக்கும், 3 ஆண்டு டிப்ளமா என்ஜினியரிங் படித்தவர்கள் டெக்னீசியன் அப்பரன்டிஸ் பணிக்கும், 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் (ஏதேனும் ஒரு பாடப் பிரிவு) தொழில்நுட்பம் சாராத பயிற்சிப் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் வாய்ந்தவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி தேதி நவம்பர் 17. மேலும் விவரங்களுக்கு https://www.iocl.com என்ற வலைதளத்தில் பார்க்கவும்.

Also watch

First published: November 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...