இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 307 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி!

ஐஓசிஎல் நிறுவனத்தின் மேற்கு மண்டலத்தில் அப்பரன்டிஸ் பயிற்சிப் பணிக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் மொத்தம் 307 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

news18
Updated: November 25, 2018, 4:44 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 307 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி!
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணி
news18
Updated: November 25, 2018, 4:44 PM IST
நாட்டின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (IOCL)  307 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஐஓசிஎல் நிறுவனத்தின் மேற்கு மண்டலத்தில் அப்பரன்டிஸ் பயிற்சிப் பணிக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் மொத்தம் 307 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மகாராஷ்டிராவில் 177 இடங்களும், குஜராத்தில் 118 இடங்களும், கோவாவில் 9 இடங்களும், உத்தராண்டில் 3 இடங்களும் உள்ளன. டிரேடு அப்பரன்டிஸ், டெக்னீசியன் அப்பரன்டிஸ், அக்கவுண்டன்ட் பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வயது வரம்பு: 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ படிப்பு படித்தவர்கள் டிரேடு அப்பரன்டிஸ் பணிக்கும், 3 ஆண்டு டிப்ளமா என்ஜினியரிங் படித்தவர்கள் டெக்னீசியன் அப்பரன்டிஸ் பணிக்கும், 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் (ஏதேனும் ஒரு பாடப் பிரிவு) அக்கவுண்டன்ட் பயிற்சிப் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி தேதி நவம்பர் 27. மேலும் விவரங்களுக்கு https://www.iocl.com,  https://www.iocl.com/download/Detailed-Advertisement_Apprentice-Engagement2019.pdf ஆகிய வலைதளங்களில் பார்க்கவும்.

Also watch

First published: November 25, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...