முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / IOCL Recruitment: இந்தியன் ஆயுள் நிறுவனத்தில் 1,60,000 சம்பளத்தில் பொறியாளர் வேலை

IOCL Recruitment: இந்தியன் ஆயுள் நிறுவனத்தில் 1,60,000 சம்பளத்தில் பொறியாளர் வேலை

IOCL Latest Job Openings: இந்திய அரசின் இடஓதுக்கீட்டிற்கான விதிகள் இப்பணியிடங்களுக்கு பொருந்தும்.   எனவே, தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து தேர்வர்கள் தங்களுக்கான சலுகையைப்  பெறலாம்.   

IOCL Latest Job Openings: இந்திய அரசின் இடஓதுக்கீட்டிற்கான விதிகள் இப்பணியிடங்களுக்கு பொருந்தும்.   எனவே, தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து தேர்வர்கள் தங்களுக்கான சலுகையைப்  பெறலாம்.   

IOCL Latest Job Openings: இந்திய அரசின் இடஓதுக்கீட்டிற்கான விதிகள் இப்பணியிடங்களுக்கு பொருந்தும்.   எனவே, தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து தேர்வர்கள் தங்களுக்கான சலுகையைப்  பெறலாம்.   

  • Last Updated :

IOCL Recruitment: பொறியாளர் மற்றும் பட்டதாரி பொறியாளர்கள் அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை  இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுளளது.

பணியிடங்கள்:

பொறியாளர் (Engineers/Officers) /பட்டதாரி பொறியாளர்கள் அப்ரெண்டிஸ் (Graduate Engineer Apprentice)

UPSC 2023 | யுபிஎஸ்சியின் வருடாந்திர தேர்வுகால அட்டவணை வெளியீடு

கல்வித்தகுதி: 

Chemical Engineering, Civil Engineering, Computer Sc and Engineering,  Electrical Engineering, Instrumentation Engineering, Mechanical Engineering, Metallurgical Engineering ஆகிய பாடப்பிரிவில் பல்கலைக் கழக மானியக் குழு/ AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2022 அமர்வுகளில், மேலே குறிப்பிடபட்டுள்ள  பாடங்களில் தகுந்த கேட் மதிப்பெண் பெற்றிக்க வேண்டும்.

சம்பளம் : 

பொறியாளர் பணியிடங்களுக்கு  50,000 - 1,60,000 என்ற சம்பள நிலை கடைபிடிக்கப்படும். அதைத் தாண்டி, அகவிலைப்படி உயர்வு, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற இதர சலுகைகள் வழங்கப்படும்.

பட்டதாரி பொறியாளர்கள் அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு மத்திய அரசின் நெறிமுறைப்படி, பயிச்சி காலத்தின் போது, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட பெருந்தொகை வழங்கப்படும். பயிற்சி காலத்திற்குப் பிறகு நிருவனத்தின் பணியாளராக மாற சாத்தியக் கூறுகள் உண்டு.

முக்கியமான நாட்கள்: 

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2022, மே 22

வயது வரம்பு: 

2022, ஜூன் 30 அன்றுள்ளபடி, பொதுப் பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரகள் 26 வயதுக்கு (1996 ஜுலை  1ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் ) மிகாமல் இருத்தல் வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில், பொதுப் பிரிவினர்/பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்/ பொருளாதரம் முன்னேற்றம் கண்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  65% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். ஏனைய வகுப்பினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அரசின் இடஓதுக்கீட்டிற்கான விதிகள் இப்பணியிடங்களுக்கு பொருந்தும்.   எனவே, தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து தேர்வர்கள் தங்களுக்கான சலுகையைப்  பெறலாம்.

தெரிவு செய்யப்படும் முறை: 

பணியிட ஒதுக்கீட்டு விதியின் அடிப்படையில் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதற்கட்ட பட்டியல் தயார் செய்யப்படும். இதில், தேர்வான விண்ணப்பதாரர்கள் Group Discussion(GD), Group Task (GT) மற்றும் Personal Interview (PI) ஆகியவற்றில் கலந்து கொள்வது கட்டாயமாகும். இதில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

விண்ணப்பதாரர்கள்  https://iocl.com/latest-job-opening  என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சமீபத்தில் எடுக்கப்பட்ட    புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

முழுமையான விபரங்களை காண IOCL Latest Job openings  என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

top videos

    ONGC: ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு: உதவித்தொகையுடன் 3,614 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

    First published:

    Tags: Government jobs, IOCL