இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு: உடனே அப்ளை பண்ணுங்க…

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு: உடனே அப்ளை பண்ணுங்க…
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணி
  • News18
  • Last Updated: September 17, 2018, 6:42 PM IST
  • Share this:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அப்பரன்டீசாக பணிபுரிவதற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாட்டின் உள்ள எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐஓசி) மிகவும் முக்கியமானது. இந்த நிறுவனத்தில் 344 அப்பரன்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், டிரேட் பிரிவில் 150 இடங்களும், டெக்னீசியன் பிரிவில் 194 இடங்களும் உள்ளன. இந்த காலியிடங்கள் தென்மாநிலங்களில் நிரப்பப்பட உள்ளன. இதில், தமிழகத்திற்கான ஒதுக்கீடு 145 இடங்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.  எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் உண்டு.


கல்வித் தகுதி: ஐடிஐ அல்லது டிப்ளமா

தேர்வு முறை: மேற்கண்ட பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 21.

மேலும், விவரங்களுக்கு www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும் அல்லது கூகுள் தேடுபொறியில் Indian Oil Corporation Limited (IOCL) Trade & Technician Apprentice Vacancies 2018 என்று டைப் செய்து பார்க்கவும்.
First published: September 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading