Home /News /employment /

வேலையில் சேர நம்மை ரோபோக்கள் இன்டெர்வியூவ் செய்யும் காலம் மிக அருகில்...

வேலையில் சேர நம்மை ரோபோக்கள் இன்டெர்வியூவ் செய்யும் காலம் மிக அருகில்...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Artificial Intelligence | ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் அடிப்படையில் செயல்படும் மெஷினுடன் ஒருவரது தரவுகளை பொருத்தி பார்க்கும்போது, தகுதியில்லாத நபர்களை மிக எளிமையாக கண்டறிய முடிகிறது என பல நிறுவனங்கள் நினைக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு, நடுத்தர நிறுவனங்கள் பலவற்றில் 96.5 சதவீதம் நிறுவனங்கள் பணியாளர்கள் தேர்வில் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் என்னும் முறையை கையாள தொடங்கியுள்ளன. இதன் மூலமாக பாகுபாடுகளை களைந்து, பணி நியமன நடைமுறையை மேம்படுத்த முடியும் என்று கருதுகின்றனர்.

    ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் அடிப்படையில் செயல்படும் மெஷினுடன் ஒருவரது தரவுகளை பொருத்தி பார்க்கும்போது, தகுதியில்லாத நபர்களை மிக எளிமையாக கண்டறிய முடிகிறது என்று நினைக்கின்றனர்.

    50 சதவீத பணி நியமனதாரர்கள், இனி வரக்கூடிய ஆண்டுகளில் பணியாளர்களை தேர்வு செய்வதில் நிரந்தரமான இடத்தை ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் பெறும் என்று கருதுகின்றனர். சேட்டிங் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் Hirect (ஹைரெக்ட்) என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

    Read More : அப்பா இறந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு மகள் கைக்கு கிடைத்த கடிதம்... என்ன இருந்தது தெரியுமா?


    பணியிடங்களில் முக்கியமான தலைமைத்துவம் நிறைந்த பணிகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ள சூழலில், அதை எதிர்கொள்ள பன்முகத்தன்மை நிறைந்த பணிக்குழுவினரை அமைப்பது அவசியமாகிறது என்று 52 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. திறன்களின் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று 97.4 சதவீத பணியாளர்கள் கூறியுள்ளனர்.

    பழைய ஊழியர்களுக்கும் முக்கியத்துவம்

    புதிய ஊழியர்களை தேர்வு செய்வதற்குப் பதிலாக பழைய ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வது நல்லது என்று 87 சதவீத நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. இதுகுறித்து ஹைரக்ட் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச இணை நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான ராஜ் தாஸ் கூறுகையில், ”ஊழியர்களை மையப்படுத்தியதாக சந்தை இருக்கிறது. இந்நிலையில், போட்டி மிகுந்த இன்றைய தொழிலாளர் சந்தையில் தன்னுடைய இருப்பை ஒருவர் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால், சமீபத்திய திறன்களை உடனுக்குடன் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

    குறிப்பாக, தாங்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமான சாத்தியக்கூறுகளை ஊழியர்கள் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம்

    பெரிய நிறுவனங்களை பொருத்தவரையில் நேரடியாக விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பணியாளர்களை தேர்வு செய்ய நினைக்கின்றனர். ஆனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதுபோன்ற நீண்ட நெடிய நடவடிக்கைகளை விரும்புவதில்லை.

    சுருக்கமாக தங்களிடம் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களை யாரை பரிந்துரை செய்கிறார்களோ, அவர்களை தேர்வு செய்ய முன்னுரிமை கொடுக்கின்றனர். ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் தேவை என்ன என்பது குறித்து, தனக்கு தெரிந்தவர்களின் திறமை என்ன என்பது குறித்தும் தெரிந்திருக்கும் என்பதால், உடனடியாக திறன் வாய்ந்த பணியாளர்களை தேர்வு செய்ய முடிகிறது என்று கருதுகின்றனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Trending Videos

    அடுத்த செய்தி