சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள 876 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு ஆள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு பணிகளை ஐசிஎஃப் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள பணியிடங்களில் 276 பணியிடங்கள் புதுமுக விண்ணப்பதாரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகள் முன்னாள் ஐடிஐ நபர்களுக்கு வழங்கப்படும்.
ஐசிஎஃப் தொழிற்சாலையில் கார்பண்டர், பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், எல்க்ட்ரீசியன் மற்றும் பெயிண்டர் ஆகிய பிரிவுகளின் கீழ் அப்ரண்டீஸ் தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள்
https://pb.icf.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 16ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் அப்ரண்டீஸ்களுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைக்கும்.
எவ்வளவு உதவித்தொகை பெறலாம் :
அப்ரண்டீஸ் பணிகளில் சேரும், 10ஆம் வகுப்பு முடித்த புதுமுக விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோரும் ரூ.6,000 உதவித் தொகையாக வழங்கப்படும். அவர்கள் 12ஆம் வகுப்பு முடித்திருப்பின் மாதந்தோறும் ரூ.7,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
மத்திய அரசு நிறுவனம் அல்லது மாநில அரசு நிறுவனம் மூலமாக சான்றளிக்கப்பட்ட எக்ஸ் ஐடிஐ தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி :
புதுமுக விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எக்ஸ் ஐடிஐ விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து தேசிய வர்த்தகச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
ஜூலை 26ஆம் தேதி நிலவரப்படி 15 முதல் 24 வயது கொண்டவராக இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி
- முதலில் ஐசிஎஃப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அப்ரண்டீஸ் பணிகளுக்கு விண்ணப்பம் செய்க என்ற லிங்க் மீது கிளிக் செய்யவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும். இறுதியாக சப்மிட் பட்டன் அழுத்தவும்.
- இதைச் செய்த பிறகு, விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாடு கருதி பிரிண்ட் அவுட் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு
இடஒதுக்கீட்டு பிரிவுகளில் அல்லாதவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 மற்றும் சேவைக் கட்டணம் சேர்த்து கட்ட வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.