நாட்டின் முன்னணி தொழிநுட்ப சேவை வழங்கும் நிறுவனமான இன்போசிஸ், Process Executive பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலை தேடும் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பதவி :
Process Executive
Job ID/Reference Code : PROGEN-External-127361
முன் அனுபவம் : முற்றிலும் தேவையில்லை.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 10, 12 மற்றும் பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடமை: வெளியிடப் பணி நிறுவனச் சேவையில் (பிபிஒ) பணியமர்த்தப்படுவார்கள்.
SLA செயல்முறைகள், வள திட்டமிடல், வணிக மேம்பாடு செயல்முறைகளை அடையாளம் காண வேண்டும்.
துரிதமான முடிவெடுக்கும் திறன் கொண்டவராகவும், வாய்வழி மற்றும் எழுத்து தொடர்பு திறன் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை career.infosys.com என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.
career.infosys.com எனும் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்
முகப்பு பக்கத்தில், "APPLY"எனும் லிங்கை கிளிக் செய்யவும்.
ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை அங்கு காணலாம்.
கல்வித்தகுதி, வயது, கணினி சார்ந்த அறிவு, இருப்பிடம், உடற்தகுதி, சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க
இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்காலத் தேவைகளுக்காக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
50,000 இளைஞர்களை பணியமர்த்த இன்போசிஸ் திட்டம்:
இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனம் வரும் நிதியாண்டில் 50,000க்கும் மேற்பட்ட அனுபவம் இல்லாத (Fresher's) இளைஞர்களை பணியமர்த்த முடிவெடுத்துள்ளது. முன்னதாக, இன்ஃபோசிஸ் நிறுவனம், 2022 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை வெளியிட்டது. 2022 நிதியாண்டில், நிறுவனத்தின் டிஜிட்டல் ( உதாரணமாக, Cloud computing) சந்தையின் மதிப்பு 41.2% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது,கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 38.8 சதவீத நேர்மறையான வளர்ச்சியாகும். நான்காவது காலாண்டில் அதன் நிகர லாபம் 5686 கோடியாக உள்ளது.
அதேபோன்று, 2022 நிதியாண்டில் அதன் வருவாய் வளர்ச்சி விகிதம் 19.7% ஆக உள்ளது. இது,கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 20.6 சதவீத நேர்மறையான வளர்ச்சியாகும்.மேலும் , நான்காவது காலாண்டில் அதன் Operating Margin (செயல்பாட்டு லாப இலக்கு) வளர்ச்சி விகிதம் 21.5% ஆக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.