ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

Infosys: 50,000க்கும் மேற்பட்ட இளைஞர்களை பணியமர்த்த உள்ளோம் - இன்ஃபோசிஸ்

Infosys: 50,000க்கும் மேற்பட்ட இளைஞர்களை பணியமர்த்த உள்ளோம் - இன்ஃபோசிஸ்

Infosys

Infosys

Infosys | நான்காவது காலாண்டில் இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனத்தின் Operating Margin (செயல்பாட்டு லாப இலக்கு) வளர்ச்சி விகிதம் 21.5% ஆகா உள்ளது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனம் வரும் நிதியாண்டில் 50,000க்கும் மேற்பட்ட அனும்பவம் இல்லாத (Fresher's)  இளைஞர்களை பணியமர்த்த  முடிவெடுத்துள்ளது.

  முன்னதாக, இன்ஃபோசிஸ் நிறுவனம், 22 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை நேற்று வெளியிட்டது. 2022 நிதியாண்டில், நிறுவனத்தின் டிஜிட்டல் ( உதாரணமாக,  Cloud computing) சந்தையின் மதிப்பு  41.2% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது,கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 38.8 சதவீத நேர்மறையான வளர்ச்சியாகும். நான்காவது காலாண்டில் அதன்  நிகர லாபம் 5686 கோடியாக உள்ளது.

  அதேபோன்று, 2022 நிதியாண்டில் அதன் வருவாய் வளர்ச்சி விகிதம் 19.7% ஆகா உள்ளது. இது,கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 20.6 சதவீத நேர்மறையான வளர்ச்சியாகும்.மேலும் , நான்காவது காலாண்டில் அதன் Operating Margin (செயல்பாட்டு லாப இலக்கு) வளர்ச்சி விகிதம் 21.5% ஆகா உள்ளது.

  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: 

  அறிக்கை வெளியிட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய  இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய், " 2022 நிதியாண்டில் மட்டும் 85,000 அனுபவம் இல்லாத இளைஞர்கள் (Fresher's) பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில், இந்தியாவில் மட்டும் 54,30 பேர் உள்ளனர்.  வரும் நிதியாண்டில், 50000க்கும் மேற்பட்ட இளைஞர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம்.  இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்றம் விகிதம் 27.7 % ஆக உள்ளது" என்று தெரிவித்தார்.

  மார்ச் 31,2022டிசமபர் 31,2021மார்ச் 31,2021
  பெண் ஊழியர்களின் விகிதம்39.6%39.6%38.6%
  ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்27.7%25.5%10.9%

  நான்காவது காலாண்டில் நல்ல வளர்ச்சி விகிதம் காணப்படுவதால், வரும் நிதியாண்டில் இருந்து அதன் ஊழியர்களுக்கு தகுந்த சம்பள உயர்வுக்கு   வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

  வேலைவாய்ப்பு அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில் நாட்டின் சேவைத் துறைகள் (ஐடி ) வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்கிறது. உதரணமாக, 2022 பிப்ரவரியில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்தது) 57.03 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலத்தை விட 25.41 சதவீதம் அதிகமாகும்.

  மேலும், இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஐடி மையங்களை தொடங்க ஐடி தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இது ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், அந்தப் பகுதி வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும் என்றும் கூறப்படுகிறது. தற்போது, அனுபவமிக்க விண்ணப்பதாரர்களை விட, புதியவர்களை பணியமர்த்துவதில் விப்ரோ,டிசிஸ், சிடிஎஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. 2022 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் அனுபவம் இல்லாத இளைஞர்களை (Fresher's) பணியமர்த்தும் எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே காலத்தை விட 30 சதவீதம் அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

  எனவே, சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களும், இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் ஆர்வமுடன் உழைத்தால் விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களில் பணியில் சேர முடியும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Infosys, IT JOBS, Jobs