அம்பத்தூர் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பொது மற்றும் தனியார் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் (PPP Scheme) காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2022 ஆகும்.
பதவியின் பெயர் | தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் கட்டிடப்பட வரைவாளர் (Draughtsman Civil) | தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் தையர் தொழிற்நுட்பம் (Sewing Technolgy) |
காலியிடம் | 1 | 1 |
கல்வித் தகுதி | சிவில் என்ஜினியரிங் படிப்பில் டிகிரி பட்டமும் ஓராண்டு முன் பணி அனுபவமும் இருக்க வேண்டும்அல்லதுசிவில் என்ஜினியரிங் படிப்பில் டிகிரி பட்டமும் மற்றும் 2 ஆண்டுகள் முன்பணி அனுபவமும் இருக்க வேண்டும்அல்லதுதேசிய தொழிற் சான்றிதழும் (National Trade Certification), 3 ஆண்டுகள் முன்பணி அனுபவமும் இருக்க வேண்டும்தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழும் (National Apprentice Certificate ), 2 ஆண்டுகள் முன்பணி அனுபவமும் இருக்க வேண்டும் |
வயது: 01.07.2022 அன்று குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000/-
ஒப்பந்த காலம்: 11 மாதங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.12.2022
மேற்காணும் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, தொழிற்நுட்ப கல்வித்தகுதி, முன் அனுபவம், சாதி சாண்றிதழ், வீட்டு முகவரி, கைபேசி எண், ஆதார் நகல் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் கூடிய சுய விபர விண்ணப்ப படிவமாக தயார் செய்து சான்றிதழ்களின் நகல்களுடன் தன் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
இதையும் வாசிக்க: ரூ.70,000 வரை சம்பளம்.. சென்னை ஜார்ஜ் கோட்டையில் வேலை!
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர் / செயலாளர்,
நிலைய மேலாண்மைக்குழு (IMC) அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்),
அம்பத்தூர்,
சென்னை-600098
என்ற முகவரிக்கு 22.12.2022 மாலை 5.30 மணிக்குள் தபால் மூலமாக அனுப்பி வைக்கவும்.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக்: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஏமாற்றம்
விண்ணப்பங்கள் தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.