கோவிட் வைரஸ் பாதிப்புக்கு பிறகு இந்தியாவில் ஆன்லைன் கேமிங் வர்த்தகம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வீட்டில் இருக்கும் மக்கள் பொழுது போக்குக்காக தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களை காட்டிலும் ஆன்லைன் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வத்தை காட்டுகின்றனர். இதனால், நடப்பு நிதியாண்டியில் ஆன்லைன் கேம் வர்த்தகம் 6 ஆயிரம் கோடி ரூபாய் என்ற நிலையை அடைந்துள்ளது. உலகளவிலான ஒட்டுமொத்த ஆன்லைன் வர்த்தகத்தில் இது 44 விழுக்காடு வருவாய் ஆகும்.
எதிர்வரும் காலங்களிலும் ஆன்லைன் கேமிங்கிற்கு அதிக வரவேற்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கே.பி.எம்.ஜி நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வின்படி, இந்தியாவில் ஆன்லைன் கேம் வர்த்தகம் 2021 முதல் 2025 வரையிலான நிதியாண்டில் 16,900 கோடி ரூபாயாக உயரும் என கூறியுள்ளது. ‘Beyond the tipping point - A primer on Casual gaming in India’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் ஆன்லைன் கேமிங்கில், கேஷூவல் கேமிங் அதிக வருவாயைக் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த வருவாயில் கேஷூவல் கேமிங்கின் வருவாய் 58 விழுக்காடாக இருக்கும் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
Also Read:
PhonePe யூசர்கள் இனி யுபிஐ வழியாக வாலட்டை ஆட்டோ டாப்-அப் செய்யலாம்!
உலகளவிலான கேமிங் துறையில் சீனாவைத் தவிர்த்தால், அதிக ஆன்லைன் கேம்களை பதிவிறக்கம் செய்த நாடாக இந்தியா இருப்பதாக கே.பி.எம்.ஜி அறிக்கை கூறுகிறது. குவார்ட்டர் 1 மற்றும் 3 காலாண்டுகளில் சுமார் 7.3 பில்லியன் பதிவிறக்கம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அந்த ஆய்வு, உலகளவிலான ஒட்டுமொத்த பதிவிறக்கத்தில் 17 விழுக்காடு என கூறுகிறது. கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் திரும்பிப் பார்க்கும்போது இந்தியாவில் கேமிங் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாகவும், கோவிட் தொற்றுக்கு பிறகு இன்னும் உச்சத்தை தொட்டிருப்பதாக கே.பி.எம்.ஜி நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
Also Read:
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் எதற்காக விண்வெளிக்கு செல்கிறார்?
முதன்மை இடத்தில் இருக்கும் 100 விதமான ஆன்லைன் விளையாட்டுகளை ஆய்வுக்குட்படுத்தியபோது, அதிக நேரம் கேம் விளையாடுவோரின் எண்ணிக்கை 10 முதல் 15 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும், இது கோவிட் வைரஸ் பரவலுக்கு பிறகான நிலை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோரை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு, ஒருங்கிணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு இதில் இருப்பதாலும், பல நபர்கள் ஒரே விளையாட்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதும், கேமிங் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தியாவில் தற்போது 2வது அலை கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில வாரங்களில் 3 வது அலை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளதால், மேலும் சில கட்டுப்பாடுகள், ஊரங்கு ஆகியவை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு இந்திய டெவலப்பர்ஸ் மற்றும் உலக கேமிங் டெவலப்பர்ஸ் இந்திய சந்தையை குறி வைத்து புதிய கேம்களை உருவாக்கி வருவதாகவும் கே.பி.எம்.ஜி ஆய்வு கூறுகிறது. பல பெரிய நிறுவனங்கள் கேமிங்கில் அதிகளவு முதலீடு செய்வதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.