இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை ஏப்ரல் மாதம் 7.6% அதிகரிப்பு!

மே மாதம் தேர்தல் முடிந்த பிறகு புதியதாக வரும் அரசு எந்த மாதிரியான கொள்கைகளை வகுக்கும் என்று தெரியாததால் நிறுவனங்கள் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் உள்ளன.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை ஏப்ரல் மாதம் 7.6% அதிகரிப்பு!
வேலைவாப்பின்மை
  • News18
  • Last Updated: May 3, 2019, 7:10 PM IST
  • Share this:
இந்தியாவில் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைவாய்ப்பின்மை 7.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியப் பொருளாதாரம் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

2019 மார்ச் மாதம் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது என்று தெரிவித்திருந்தால் அடுத்த மாதமே அது அதிகரித்துள்ளது என்றும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவரான மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2019 மே 19-ம் தேதிவரை நடைபெற உள்ள நிலையில் மோடி தலைமையிலான அரசுக்கு மீண்டும் ஆட்சிக்கு வர இந்த அறிக்கை பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


ஏப்ரல் மாதம் தொழிற்சாலைகள் அதிக ஆர்டர்களை பெற்றிருந்தாலும் உற்பத்தி குறைவாகவே உள்ளது. இதற்கு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதே காரணம் என்று அண்மையில் வெளியான வணிக நிறுவன சர்வே முடிவுகள் கூறுகின்றன.

மே மாதம் தேர்தல் முடிந்த பிறகு புதியதாக வரும் அரசு எந்த மாதிரியான கொள்கைகளை வகுக்கும் என்று தெரியாததால் நிறுவனங்கள் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் உள்ளன.

இந்தியாவில் எப்போதுமே 5 ஆண்டுக்கு ஒருமுறை தான் வேலைவாய்ப்பின்மை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். ஆனால் அது வெளியாகாத நிலையில் டிசம்பர் மாதம் 45 வருடங்கள் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பினை அதிகரித்துள்ளதாகத் தகல்கள் கசிந்துள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் 2018-ம் ஆண்டு 1.1 கோடி நபர்கள் வேலையை இழந்துள்ளனர். இது பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றால் வணிக நிறுவனங்கள் அடைந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை என்பதைக் காட்டுகிறது.

இந்த ஆண்டு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தங்களிடம் பண மதிப்பு நீக்கத்தின்போது எவ்வளவு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
First published: May 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்