ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டவரா? இந்திய உச்சநீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு விண்ணப்பியுங்கள்

தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டவரா? இந்திய உச்சநீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு விண்ணப்பியுங்கள்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அசாம், பெங்காலி, உருது, குஜராத்தி, மராத்தி, மணிப்புரி, ஒடியா, பஞ்சாபி ஆகிய மொழிகளில் தலா 2 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 • 2 minute read
 • Last Updated :

  உச்சநீதிமன்றத்தில் இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  இதுகுறித்து, உச்சநீதிமன்ற பதிவாளர் (பணி நியமனம்) வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2021 அன்று 32-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

  எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

  விண்ணப்பதாரர் அரசு அல்லது பிரபல தனியார் நிறுவனங்களில் ஆங்கிலத்திலிருந்து மாநில மொழிக்கும், மாநில மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கும் மொழிபெயர்ப்பு செய்த இரண்டாண்டு அனுபவத்துடன் இருக்க வேண்டும். இத்துடன் இந்த இரு மொழிகளிலும் கணினி சார்ந்த திறன் இருக்க வேண்டும்.

  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அசாம், பெங்காலி, உருது, குஜராத்தி, மராத்தி, மணிப்புரி, ஒடியா, பஞ்சாபி ஆகிய மொழிகளில் தலா 2 பதவிகளுக்கும், நேபாளி மொழியில் ஒரு பதவிக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.44,900-த்துடன் இதர படிகளும் சேர்த்து மொத்த ஊதியம் தோராயமாக மாதத்திற்கு ரூ.76,908 ஆக இருக்கும்.

  பதவியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது, நிர்வாக காரணங்களால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.

  ஆன்லைன் மூலமாக 14.05.2022 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் www.sci.gov.in.

  விண்ணப்பக் கட்டணம்:   இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.250 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக்  கட்டணமாக செலுத்த வேண்டும்.

  தெரிவு செய்யப்படும் முறை: 

  பொது அறிவு, மொழித் திறனறிவு, தட்டச்சு, நேர்காணல் ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.    

  மேலும், முழுமையான விபரங்களை அறிய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்

  ஆன்லைனில் விண்ணப்பிக்க  

  Published by:Salanraj R
  First published:

  Tags: Supreme court