ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்தியப் பாதுகாப்பு அச்சகத்தில் 85 காலியிடங்கள்: ஐடிஐ சான்றிதழ் படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

இந்தியப் பாதுகாப்பு அச்சகத்தில் 85 காலியிடங்கள்: ஐடிஐ சான்றிதழ் படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

https://ispnasik.spmcil.com  என்ற இணையப்பக்கத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  இளநிலை தொழில்நுட்ப பணியாளர் காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்தியப் பாதுகாப்பு அச்சகம் (India Security Press) வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு  விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முக்கியமான நாட்கள்:

  அறிவிப்பு: 08.10.2022

  இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 08.11.2022

  எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2022 டிசம்பர்/ 2023  ஜனவரி

  காலியிடங்கள்: 85

  இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு இடமும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு எட்டு இடங்களும் Horizontal Reservation-ன் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.

  கல்வித் தகுதி: தொடர்புடைய துறைகளில் மாநில தொழிற் பயிற்சி குழுமம் (SCVT),  மத்திய தொழிற் பயிற்சி குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 08.11.2022 அன்று 25-க்கு கீழும், 18 க்கு மேலும் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

  இதையும் வாசிக்க: தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு: சாரணர் இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம்

  விண்ணப்பம் செய்வது எப்படி: https://ispnasik.spmcil.com  என்ற இணையப்பக்கத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

  தெரிவு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

  India Security Press Advt. No. 02/2022

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment