கிழக்கு ரயில்வே மண்டலத்தின் பல்வேறு பிரிவுகளில், மொத்தம் 2,972 பணியிடங்கள் அப்ரண்டீஸ் முறையில் நிரப்பப்பட உள்ளன. கிழக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ரயில்வே ரெக்ரூட்மென்ட் பிரிவின் கீழ், தகுதிவாய்ந்த அனைவரும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.
பணி நியமன நடவடிக்கைகள் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பு மே 10ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள 2,972 பணியிடங்களில் 659 இடங்கள் ஹௌரா மண்டலத்திலும், 612 இடங்கள் லிலுவா மண்டலத்திலும், 312 பணியிடங்கள் சியால்டா மண்டலத்திலும் உள்ளன. இது தவிர கஞ்சிரபாரா, மால்டா, அர்சோனல், ஜமல்பூர் ஆகிய மண்டலங்களிலும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமாக மட்டுமே சமர்பிக்கப்பட வேண்டும் என்பதை பணி ஆர்வலர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
பணி நியமனத்திற்கான தகுதி :
வயது வரம்பு : அப்ரண்டீஸ் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 15 முதல் 24 ஆகும்.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்விகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் என்சிவிடி அல்லது எஸ்சிவிடி போன்ற அமைப்புகள் விநியோகிக்கும் தேசிய வர்த்தகச் சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக சில ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கையெழுத்துடன்
* 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பிகள்
* என்சிவி அல்லது எஸ்சிவிடி அமைப்பில் பெற்ற ஐடிஐ சான்றிதழ்கள்
Also Read : இந்தாண்டு டிஜிட்டல் சார்ந்த பணிகளுக்கு வாய்ப்பு அதிகரிப்பு..
ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?
* கிழக்கு ரயில்வே மண்டலத்தின் அதிகாரப்பூர்வ www.rrcer.com இணையதளத்தில் லாக் ஆன் செய்யுங்கள்.
* ஹோம்பேஜ் பக்கத்தில் உள்ள ரெக்ரூயிட்மெண்ட் லிங்க் மீது கிளிக் செய்யவும்.
* இங்கு கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிடவும்.
* தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பிகளை இணைக்கவும்.
* நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்களை சரிபார்த்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
* விண்ணப்பம் செய்த பிறகு, எதிர்கால பயன்பாடு கருதி அதன் நகலை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
Also Read : 100 நாள் வேலை போன்று சென்னையில் புதிய திட்டம் அறிமுகம்..
அப்ரண்டீஸ் பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். எனினும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் வரும் விண்ணப்பதாரர்கள் இந்தக் கட்டணத்தை செலுத்த தேவையில்லை. வேலைவாய்ப்பு குறித்த விரிவான தகவல்களுக்கு, கிழக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.