இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 38,926 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியாக இது பார்க்கப்படுகிறது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமார் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.
விண்ணப்பங்கள், தற்போது ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. https://indiapostgdsonline.gov.in/ என்ற இணைய முகவரியின் கீழ் நாளை (ஜூன் 5) நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
தெரிவு செய்யப்படும் முறை: நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தெரிவு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வருவதற்கான விண்ணப்பத்தை Rule 3-A (iii) of GDS
(Conduct and Engagement) Rules, 2020-ன் படி சமர்ப்பிக்க வேண்டும்.
ஊதியம் மற்றும் படிகள்: தற்போது, புதிதாக முறைப்படுத்தப்பட்ட காலம் தொடரும் படிகள் அமைப்பு மற்றும் ஊதிய அளவுகள் கடைபிடிக்கப்படும் (Time Related Continuity allowance (TRCA) structure and slabs).
வரிசை |
பதவி |
ஊதிய விவரம் |
1 |
கிளை போஸ்ட் மாஸ்டர் |
Rs. 12000/- |
2 |
உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் |
Rs. 10000/- |
விண்ணப்பிக் கட்டணம்: பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
அஞ்சல் வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.
NOTIFICATION FOR ENGAGEMENT OF GRAMIN DAKSEVAKSஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.