இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 38,926 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போது, ஆன்லைன் மூலம் விண்ணப்பபங்கள் பெறப்பட்டு வருகின்றன. இணையதளம் மூலம் விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 5 ஆகும்.
ஊதியம் மற்றும் படிகள்:
தற்போது, புதிதாக முறைப்படுத்தப்பட்ட காலம் தொடரும் படிகள் அமைப்பு மற்றும் ஊதிய அளவுகள் கடைபிடிக்கப்படும் (Time Related Continuity allowance (TRCA) structure and slabs).
வரிசை
|
பதவி |
ஊதிய விவரம்
|
1
|
கிளை போஸ்ட் மாஸ்டர்
|
Rs. 12000/-
|
2
|
உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர்
|
Rs. 10000/-
|
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.
தெரிவு செய்யும் முறை:
தெரிவு செய்யப்படும் முறை: நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தெரிவு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வருவதற்கான விண்ணப்பத்தை Rule 3-A (iii) of GDS
(Conduct and Engagement) Rules, 2020-ன் படி சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் (சாதி சான்றிதழ், கல்வித் தகுதி, மின்னஞ்சல், புகைப்படம், கையெழுத்து, தொலைபேசி எண்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Tamil nadu Notification Live Circles
விண்ணப்பிக் கட்டணம்: பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனைய
வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
அஞ்சல் வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.
அறிவிக்கையை
படிக்க இங்கே கிளிக் செய்யவும்:
பின்னணி: அஞ்சல்துறையின் துறை சாராத சேவை அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் முறையான முழு நேர ஊழியர்களுக்கு அவசியம் இல்லாத நிலையில் அடிப்படை, சிக்கன அஞ்சல் சேவை வழங்க இந்த அமைப்பு தேவைப்பட்டது. 1,29,346 துறை சாராத கிளை அஞ்சல் அலுவலகங்கள் இந்த கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர்கள் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர்கள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள் துணை மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பணியாற்றி வருகிறார்கள் (Branch, Sub and Head Post offices). கிராம அஞ்சல் பணியாளர்களைப் பகுதி நேர ஊழியர்களாக அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேர ஊழியர்களாக பயன்படுத்துதல் இந்த அமைப்பின் முக்கிய அம்சமாகும். இவர்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் தொழில்கள் மூலமாகவும் வருமானம் ஈட்ட வேண்டும். இந்தப் பணியாளர்கள் தங்களது 65-ஆவது வயது வரை பணியில் இருப்பார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.