ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை... டிப்ளமோ படிப்பு போதும்...

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை... டிப்ளமோ படிப்பு போதும்...

INdian oil Pipeline division Recruitment 2022

INdian oil Pipeline division Recruitment 2022

IOCL Pipeline Advertisement No. : PL/HR/ESTB/RECT-2022(2):  விண்ணப்பதாரர்கள் IOCL Pipelines Recruitment Portal (https://plapps.indianoil.in/ என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  உதவி பொறியியாளர் (Assistant Engineer), டெக்னிக்கல் பணியாளர் (Technical Attendant)  ஆகிய பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  காலியிடங்கள்: 56

  RECRUITMENT FOR FILLING NON-EXECUTIVE VACANCIES IN PIPELINES DIVISION: 

  இந்தியன் ஆயில் ஆட்சேர்ப்பு 2022 முக்கியமான  நாட்கள்:   

  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  10.10.2022

  12.09.2022 அன்று 18 வயதை கடந்த இந்தியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக 26க்கு கீழ் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

  கல்வித் தகுதி: உதவி பொறியியாளர் (எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், டூல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன், ஆப்ரேஷன்) ஆகிய பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் கொண்ட தொடர்புடைடைய பொறியியல் துறைகளில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்

  தொழில்நுட்ப பணியாளர் இடத்துக்கு தொடர்புடைய துறைகளில் ஐடிஐ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  தெரிவு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, திறனறிவு தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல்  தயாரிக்கப்படும்.

  சம்பளம்:  உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு ரூ.25,000 - ரூ.1,05,000 என்ற சம்பள நிலை கடைபிடிக்கப்படும். அதை தாண்டி, அகவிலைப்படி உயர்வு, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற இதர சலுகைகள் வழங்கப்படும்.

  தொழில்நுட்ப பணியாளர் பணிக்கு  ரூ. 23,000 முதல் ரூ.78000 வரை இருக்கும்.

  இதையும் வாசிக்கடெட் தாள் - I அட்மிட் கார்டு வெளியானது: பதிவிறக்கம் செய்வது எப்படி?

  விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மகளிர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

  விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பதாரர்கள் IOCL Pipelines Recruitment Portal (https://plapps.indianoil.in/ என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  இதையும் வாசிக்கஎஸ்.எஸ்.சி தேர்வுக்கான காலக்கெடு நீட்டிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்!

  முழுமையான விபரங்களை காண IOCL Latest Job openings என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

  RECRUITMENT FOR FILLING NON-EXECUTIVE VACANCIES IN PIPELINES DIVISION

  Published by:Salanraj R
  First published:

  Tags: Employment, Job Vacancy