தொழில்நுட்பம் சாராத மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சியாளர்களை (Technician, Graduate & Trade Apprentices (Technical and Non -Technical Apprentices) ஈடுபடுவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை (Advertisement No. IOCL/MKTG/APPR/2022-23) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் INDIAN OIL CORPORATION LIMITED) நிறுவனம் வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ சான்றிதழ் பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 1,747.
இதில், தமிழ்நாட்டில் 24 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கியமான நாட்கள்:
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 2023 ஜனவரி , 3 மாலை 5 மணி வரை.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: பின்னர் தெரிவிக்கப்படும்.
தெர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, பயிற்சி காலம், சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆள் சேர்க்கை அறிவிப்பில் தெளிவாக்க் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பில் , பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs