+2 முடித்தவர்களுக்கு கடற்படையில் அதிகாரி பணி

நுண்ணறிவுத் திறன், கலந்துரையாடல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

+2 முடித்தவர்களுக்கு கடற்படையில் அதிகாரி பணி
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 13, 2018, 10:56 PM IST
  • Share this:
பிளஸ் 2 முடித்தவர்கள் 'பி.டெக் கேடட் என்ட்ரி ஸ்கீம் – ஜூலை          2019’ என்ற பயிற்சி திட்டத்தின் கீழ் கடற்படையில் சேர்க்கப்பட        அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 4 ஆண்டு கால பி.டெக்.  பயிற்சி வகுப்பில் இணைக்கப்படுவர். அவர்களுக்கு பி.டெக். படித்ததற்கான சான்றிதழும் வழங்கப்படும். பின்னர், அவர்கள் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 17 வயது முதல் 19 ½ வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-2000 மற்றும் 1-7-2002 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கல்வித் தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 70 சதவீத மதிப்பெண்களையும், ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஜே.இ.இ. மெயின் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சர்வீஸ் செலக்‌ஷன் போர்டு மூலம் 2 கட்டங்களாக தேர்வு நடைபெறும். நுண்ணறிவுத் திறன், கலந்துரையாடல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் வாய்ந்தவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 22. மேலும், விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.Also watch

First published: November 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்