முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / அக்னிபத் திட்டம் : கடற்படையில் சேர இதுவரை 82,000 பெண்கள் விண்ணப்பம் - இந்திய கடற்படை தகவல்

அக்னிபத் திட்டம் : கடற்படையில் சேர இதுவரை 82,000 பெண்கள் விண்ணப்பம் - இந்திய கடற்படை தகவல்

இந்திய கடற்படை அக்னிபத் ஆட்சேர்ப்பு

இந்திய கடற்படை அக்னிபத் ஆட்சேர்ப்பு

Agnipath Recruitment 2022 : இந்திய கடற்படை அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான SSR & MR பதவிகளுக்கான பதிவு செயல்முறை நிறைவடைந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கடற்படை அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான SSR & MR பதவிகளுக்கான பதிவு செயல்முறை நிறைவடைந்தது. அக்னிவீர் பதவிகளுக்கு இதுவரை 82,000 பெண்களும் , 9.55 லட்சம் ஆண்களும் விண்ணப்பித்து உள்ளனர் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது.

இளம் வயதில் நாட்டிற்கு சேவையாற்றும் வாய்ப்பினை பெரும் விதமாக இந்திய அரசு அக்னிபாத் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் இந்திய விமான படை , கப்பற்படை , ராணுவம் என முப்படைகளிலும் ஆட்கள் சேர்க்கப்பட உள்ளனர். பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் நாட்டிற்கு சேவையாற்ற பணியில் அமர்த்தப்படுவர். இந்த திட்டத்தில் 17 வயது முதல் 21 வயது வரையிலான ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் தற்போது இந்த பணிகளில் கடற்படை பணிக்கு விண்ணப்பிக்க பதிவு காலம் நிறைவடைந்தது. இதில் இதுவரை எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் எனும் தகவலை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.

ALSO READ | புதுச்சேரி ஜிப்மரில் சூப்பர் வேலை.. ரூ.60,000 சம்பளம் - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அதில் இதுவரை மொத்தம் கடற்படைக்கு மட்டும் விண்ணப்பித்தவர்களில் 82,000 பெண்கள் உட்பட 9.55 லட்சம் அக்னிவீர் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

First published:

Tags: Agnipath, Job Vacancy