கடற்படையில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றில் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கடற்படையில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: December 27, 2018, 5:04 PM IST
  • Share this:
கடற்படையில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி (Sailor) பணிக்கு 400 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். செய்லர் ஃபார் மெட்ரிக் ரெக்ரூட் (Sailor for Matric recruit Oct 2019) பிரிவின் கீழ் இந்த சேர்க்கை நடைபெறுகிறது.

வயதுவரம்பு: 1-10-1998 தொடங்கி 30-9-2002 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

உடல் தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத் திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 ஆகவும், கண்ணாடியுடன் 6/6, 6/6 ஆகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரைத் தவிர மற்றவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.205 செலுத்த வேண்டும்.கடைசி தேதிவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 30. மேலும் விவரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in/en/page/mr-nmr.html என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

Also watch

First published: December 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading