Home » News » Employment » INDIAN NAVY INVITES APPLICATIONS FOR 3000 SAILOR VACANCIES

கடற்படையில் 3,000 பேருக்கு பயிற்சியுடன் கூடிய வேலை!

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும்.

கடற்படையில் 3,000 பேருக்கு பயிற்சியுடன் கூடிய வேலை!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: December 24, 2018, 8:32 PM IST
  • Share this:
பிளஸ் 2 முடித்த 3,000 பேர் இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய மாலுமி (Sailor) பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் எஸ்.எஸ்.ஆர் பிரிவின் கீழ் 2,500 இடங்களும், ஏ.ஏ. பிரிவின் கீழ் 500 இடங்களும் உள்ளன.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-8-1998 தொடங்கி 31-7-2002 வரையிலான காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


உடல் தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத் திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 ஆகவும், கண்ணாடியுடன் 6/6, 6/6 ஆகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரை தவிர மற்றவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 205 செலுத்த வேண்டும்.

கடைசி தேதிவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 30. மேலும் விவரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in/en/page/artificer-apprentice.html, https://www.joinindiannavy.gov.in/en/page/ssr.html ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.Also watch

First published: December 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading