முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள் - முழு விவரம்..

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள் - முழு விவரம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Indian Navy Jobs 2022: கடற்படை காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை  www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

  • Last Updated :

மருந்தாளுனர், தீயணைப்பு வீரர், பூச்சிக் கட்டுப்பாட்டு ஊழியர் ஆகிய பதவிகளுக்கான  காலி பணியிடங்கள் அறிவிப்பை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள்: 127

பதவிகாலி இடங்கள்
மருந்தாளுனர்1
தீயணைப்பு வீரர்120
பூச்சிக் கட்டுப்பாட்டு ஊழியர்06

யார் விண்ணப்பிக்கலாம்: 

இந்திய பாதுகாப்புத் துறையில் மேலே குறிப்பிடப்பட்ட பணியிடங்களுக்கு சமமான பணியில் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாவர். பணி அனுபவம் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை www.joinindiannavy.gov.in  personnel > civilian page என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இதற்கான, விண்ணப்ப படிவத்தை  www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் (vigilance Clear Certificate, Integrity Certificate, Cadre Clearance Certificate)  விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவங்கள் பெறப்படாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,

The Flag officer Commanding-in-chief

(for SO 'CP')

Headquarters Western Naval Command,

Ballad Pier, Near Tiger Gate,

Mumbai- 400 001

ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள்  விண்ணப்ப படிவம் வந்து சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான நாள் - 2022, 28 பிப்ரவரி. எனவே, கடைசி தேதி, ஜூன் 26ம் தேதி அல்லது அதற்கு முன்பாக

முதற்கட்ட  தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்டமாக உடல்தகுதி மற்றும் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பின், பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.

வயது வரம்பு:  விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி  நாளின் படி, விண்ணப்பதாரர் 56 வயது பூர்த்தியடையாதவராக இருத்தல் வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

இதையும் படிக்கவும்: 

நெட் தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்கியது.. தகுதி, கட்டணம் என்ன?

குரூப் 4 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி : தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

First published:

Tags: Army jobs, Indian Navy