ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய கடற்படையில் 127 காலியிடங்கள்... 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - விண்ணப்பிக்க விவரம் இங்கே

இந்திய கடற்படையில் 127 காலியிடங்கள்... 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - விண்ணப்பிக்க விவரம் இங்கே


இந்திய கடற்படை

இந்திய கடற்படை

Indian Navy Group C Recruitment 2022 | இந்திய கடற்படையில் காலியாக உள்ள 127 பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 127 பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி அறிவிப்பு வெளியானது.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறைஇந்திய கடற்படை (Indian Navy) 
காலியாக உள்ள வேலையின் பெயர்Pharmacist, Fireman, Pest Control Worker
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி27/04/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி26/06/2022 அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்
PharmacistLevel 5 ஊதிய அளவின் படி, ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை
FiremanLevel 2 ஊதிய அளவின் படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை
Pest Control WorkerLevel 1 ஊதிய அளவின் படி, ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை

கல்வித் தகுதி விவரம்அரசு அல்லது அரசு அங்கீகாரம் பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
பிற தகுதிகள்
Firemanவிண்ணப்பதாரர்கள் கட்டாயம் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உடல் தகுதி உடையவராக இருக்க வேண்டும்.
Post Control Workerவிண்ணப்பதாரர்கள் ஹிந்தி (Hindi ) அல்லது உள்ளூர் மொழிகளில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

வயது தகுதி

56 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

மொத்த காலிப்பணியிட விவரம்

127  காலியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை

OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

 விண்ணப்பதாரர்கள் Merit List, Physical Fitness Test மற்றும் Document Verification வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப தாரர்கள் விண்ணப்ப படிவத்தை தவறில்லாமல் பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி :

The Flag Officer Commanding-in-chief,

HeadQuarters Wastern Naval Command,

Ballad Pier , Near Tiger Gate

Mumbai - 400 001.

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://drive.google.com/file/d/1NmRrkmwnwdFMEP2p_72jYu4ghCbfdVzo/view

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://www.joinindiannavy.gov.in/

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

First published:

Tags: Job Vacancy