முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / அக்னிவீர் : இந்திய கடற்படையில் ஆட்சேர்ப்பு.. 10-வது தகுதி - பெண்களும் விண்ணப்பிக்கலாம்

அக்னிவீர் : இந்திய கடற்படையில் ஆட்சேர்ப்பு.. 10-வது தகுதி - பெண்களும் விண்ணப்பிக்கலாம்

இந்திய கடற்படை

இந்திய கடற்படை

Indian Navy Agniveer Recruitment 2022 : இந்திய கடற்படை வெளியிட்டுள்ள உள்ள MR பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ஜூலை மாதம் 25 முதல் ஜூலை 30 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • Last Updated :
  • Jobat

இந்திய கடற்படை அக்னிவீர் MR பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேற்றைய தினம் இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்திய கடற்படை அதன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு 40 பெண்கள் உட்பட மொத்தம் 200 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை ஜூலை 30 ஆம் தேதிக்குள் joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் அனுப்பலாம்.

இதற்கான தேர்வு செய்யப்படும் முறையானது, எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு (PFT) மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் உடற்தகுதி உள்ளிட்ட பல அடுக்கு செயல்முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். விரிவான தகவலுக்கு, விண்ணப்பதாரர்கள் joinindiannavy.org ஐப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கல்வித் தகுதி : இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10வது (மெட்ரிகுலேஷன்) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2022 சம்பளம் விவரம் :

அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டில் ரூ.33,000, மூன்றாம் ஆண்டில் ரூ.36,500, நான்காம் ஆண்டில் மாதம் ரூ.40,000 சம்பளம் பெறுவார்கள்.

வயது தகுதி : விண்ணப்பதாரர்கள் 01 டிசம்பர் 1999 முதல் 31 மே 2000 வரை பிறந்திருக்க வேண்டும். 17.05 வயது முதல் 21 வயது வரையிலான ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

திருமண நிலை : திருமணமாகாத ஆண் மற்றும் திருமணமாகாத பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

முக்கிய தேதிகள் : 

விண்ணப்பம் தொடங்கும் தேதி - 25 ஜூலை 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி - 30 ஜூலை 2022

எழுத்துத் தேர்வுக்குப் பிறகு தகுதிப் பட்டியல் வெளியீடு - நவம்பர் 2022

INS சில்காவில் பயிற்சி தொடங்கும் தேதி - டிசம்பர் 2022.

இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2022 : எப்படி விண்ணப்பிப்பது?

படி 1. இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.joinindiannavy.gov.in. பக்கத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்

படி 2. நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். சமர்ப்பித்த பிறகு விண்ணப்பப் படிவத்தில் எந்த மாற்றத்தையும் இந்திய கடற்படை அனுமதிக்காது. ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது சரியான விவரங்கள். ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் கடைசி தேதிக்கு முன்னரே திருத்தம் செய்து கொள்ள வேண்டும்.

படி 3. ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவேற்றவும்.

படி 4. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

படி 5. எதிர்கால பயன்பாட்டிற்காக நகல் எடுத்து வைத்துகொள்ளளவும்.

top videos

    படி 6. கொடுக்கப்பட்டுள்ள தகவல் ஏதேனும் தவறானால் வேட்புமனு ரத்து செய்யப்படலாம் என்பதை விண்ணப்பதாரர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    First published:

    Tags: Employment, Indian Navy, Job