இந்தியக் கடற்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர் (எஸ்.எஸ்.ஆர்) 2023-ம் ஆண்டுக்கான 1400 காலிப்பணியிடங்களுக்கான வீரர்கள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடற்படையில் மூத்த இரண்டாம் நிலை ஆட்சேர்ப்பு பிரிவில் கடற்படையில் உள்ள கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கருவிகள் போன்றவற்றை அடங்கிய தொழில்நுட்ப ரீதியான பணியில் சேர அக்னிவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழுமையான விவரங்களைக் காண்போம்.
இந்தியக் கடற்படை அக்னிவீரர் பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | AGNIVEER (SSR) |
காலிப்பணியிடங்கள் | 1400 |
வயது | 01 மே 2002 –31 அக்டோபர் 2005 ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள் மட்டும் |
தொகுதி | 01/2023 |
கல்வித்தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணக்கு மற்றும் இயற்பியல் பாடம் இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும் அதனுடன் வேதியியல்/உயிரியல்/கணினி அறிவியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு:
திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் முறை:
ஆக்னிவீரர்கள் மூன்று முறைகளில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழி எழுத்துத் தேர்வு, PFT மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Also Read : டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! இன்றே விண்ணப்பியுங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரராக பணிபுரிய www.joinindiannavy.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் கொண்டு விண்ணப்பிக்கவும்.
முக்கிய நாட்கள்:
நிகழ்வுகள் | தேதிகள் |
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள் | 08.12.2022 |
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 17.12.2022. |
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.