ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய கடற்படையில் 303 காலி இடங்கள் : முழு விவரம் இதோ

இந்திய கடற்படையில் 303 காலி இடங்கள் : முழு விவரம் இதோ

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜுலை 17.  மேலும் விவரங்களுக்கு https://www.indiannavy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

எலக்ட்ரிசியன், பைப் பில்டர், பெயிண்டர் உள்ளிட்ட பணிகளுக்கான அப்ரண்டீஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பை மும்பையில் உள்ள கடற்படையின் கப்பல் பழுதுபார்ப்பு தளம்  வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்:

ஓராண்டு பயிற்சித் திட்டம் :   303

ஈராண்டு பயிற்சித் திட்டம் : 35

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-8-2002 மற்றும் 31-10-2008 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு மட்டும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.

இதையும் வாசிக்க10, 12-ம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு 

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.   பயிற்சி பெற்ற அப்ரெண்டிஸ்கள் நிரந்தர பணி நியமனத்தை கோர முடியாது. பயிற்சி காலத்திற்குப் பின், பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

இதையும் வாசிக்க: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு: 11.52 லட்சம் பேரில் 13 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி 

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் வாய்ந்தவர்கள் https://dasapprenticembi.rectindia.in/  என்ற வலைதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு, அதன் நகலுடன் குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்துடன் கப்பல் தள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜுலை 17.  மேலும் விவரங்களுக்கு https://www.indiannavy.nic.in, https://dasapprenticembi.recttindia.in/Design/DAS%20advertisement.pdf ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

First published:

Tags: Indian Navy