ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய ராணுவத்தில் இன்ஜீனியரிங் பட்டதாரிகளுக்கு நிரந்த வேலைக்கு வாய்ப்பு... உடனே விண்ணப்பிக்க

இந்திய ராணுவத்தில் இன்ஜீனியரிங் பட்டதாரிகளுக்கு நிரந்த வேலைக்கு வாய்ப்பு... உடனே விண்ணப்பிக்க

இந்திய ராணுவம்

இந்திய ராணுவம்

Indian Military Academy : இந்தியன் ராணுவத்தின் 137வது தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய ராணுவத்தின் 137வது தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் நிரந்த கமிஷன் பணிக்கான டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் இன்ஜீனியரிங் பட்டதாரிகள் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான தகவல்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய ராணுவ அகாடமி விவரங்கள்:

இன்ஜீனியரிங்கள் பிரிவுஎண்ணிக்கை
சிவில், கட்டிடம், கட்டுமானம் &தொழில்நுட்பம்11
கணினி அறிவியல் & இன்ஜினியரிங்கள்,கணினி தொழில்நுட்பம்,M.Sc கணினி அறிவியல்,தகவல் தொழில்நுட்பம்09
மின்சாரம், மின்சாரம் மற்றும்மின்னணுவியல்,எலக்ட்ரானிக்ஸ் & கருவிகள்03
மின்னணுவியல், எலக்டரானிக்ஸ் & தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் &தொலைத்தொடர்பு, ஃபைபர் ஆப்டிக்ஸ், தொலைத்தொடர்பு, மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் &மைக்ரோவேவ், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ்,செயற்கைக்கோள் தொடர்பு.06
தொழில்துறை பொறியியல் &Mgt,பட்டறை தொழில்நுட்பம், ஏரோநாட்டிக்கல்,விண்வெளி,ஏவியனிக்ஸ்.09
கட்டிடக்கலை,பிளாஸ்டிக் தொழில்நுட்பம், ரிமோட் சென்சிங், பாலிஸ்டிக்ஸ், பயோ மெடிக்கல் இன்ஜி.,உணவு தொழில்நுட்பம், விவசாயம், உலோகவியல், லேசர் தொழில்நுட்பம், பயோ டெக், ரப்பர் தொழில்நுட்பம், கெமிக்கல் இன்ஜி.,போக்குவரத்து பொறியியல், சுரங்கம், அணு தொழில்நுட்பம் மற்றும் ஜவுளி02

வயது வரம்பு :

விண்ணப்பதார்களில் வயது 20 முதல் 27 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

மேல் குறிப்பிட்டுள்ள இன்ஜீனியரிங் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் ராணுவ கமிஷன் வகைகள் :

கிராண்ட் ஆஃப் கமிஷன் : தேர்ச்சி செய்யப்பட்ட விண்ணப்பதார்களில் லெப்டினன்ட் தரவரிசை பதவி பயிற்சி காலத்தில் வழங்கப்படும்.

நிரந்தர கமிஷன் : பயிற்சி காலம் முடிந்தப்பிறகு லெப்டினன்ட் பதவி நிரந்தமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி விவரங்கள்:

49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் முடிவடையும் வரை திருமணம் செய்யக்கூடாது. பயிற்சிக்கான செலவை அரசே ஏற்கும். பயிற்சி காலத்தில் நடுவில் பயிற்சியில் இருந்து வெளியேறினால் ரூ.15,055/- தொகையைச் செலுத்த வேண்டும். பயிற்சி காலம் முடிவடைந்த பிறகு அவர்களுக்கு ஏற்ற பதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை :

ராணுவ பயிற்சி காலத்தில் ரூ.56,100/- உதவித்தொகையாக வழங்கப்படும்.

உயர் பதவி மற்றும் சம்பள விவரங்கள்:

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் இரண்டு முறையில் நடத்தப்படும். முதல் நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இரண்டாம் நிலைக்குச் செல்வர். அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இறுதியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Also Read : காற்று தர மேலாண்மையில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு... முழு விவரம் இதோ..!

விண்ணப்பிக்க முறை:

இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ‘Officer Entry Apply/Login’ என்ற பிரிவை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.joinindianarmy.nic.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 15.12.2022.

First published:

Tags: Indian army, Jobs