ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய ஐடி நிறுவனங்களில் 5 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கம்!

இந்திய ஐடி நிறுவனங்களில் 5 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கம்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஐடி சேவை நிறுவனங்களால் கிட்டத்தட்ட 5,00,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியிருக்கிறது.

இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. இந்தியாவின் பொருளாதாரத்துக்கு இந்திய தொழில்நுட்பத் துறை கணிசமான அளவில் பங்களித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கல்லூரி படிப்பு முடித்த உடனே அல்லது இறுதி ஆண்டில் இருக்கும் பொழுதே வேலைக்கான ஆர்டரை இந்திய ஐ டி நிறுவனங்கள் வழங்குகின்றன. அது மட்டுமின்றி, பல்வேறு புதிய துறைகள் ஐடி சேவைகளை சார்ந்து இயங்குகின்றன. இந்த அடிப்படையில் ஐடி சேவை நிறுவனங்களால் கிட்டத்தட்ட 5,00,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியிருக்கிறது.

இந்தியாவில் ஐடி சேவைகள் நிறுவனங்களின் துறையில், இந்த நிதியாண்டில் மட்டுமே 500,000 க்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த நிதியாண்டிற்கான வளர்ச்சி இரட்டிப்பாகி உள்ளது.

இந்தியாவின் ஐடி ஜாம்பவான்கள் என்று கூறப்படும் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல், டெக் மகிந்த்ரா மற்றும் மைன்ட் ட்ரீ ஆகிய நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து வேறு சில பன்னாட்டு நிறுவனங்களான வேறு அசென்ஷர், கேப்ஜெமினி, ஐபிஎம், ஆரக்கிள் உள்ளிட்ட நிறுவனங்களிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகளில் 90% இந்த நிறுவனங்களில் இருந்துதான் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் 3,00,000 புதிய வேலைகளும், பிற பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து ஒரு 1,60,000 புதிய வேலை வாய்ப்புகளும், ஐடி சார்ந்த சேவை நிறுவனங்களில் இருந்து 50,000 மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நிறுவனங்களும் டிஜிட்டலுக்கு மாறியுள்ளன. பெரும்பாலான சேவைகளை ஆன்லைனில் பெறும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி உள்ளது.

கிளவுட், பிளாக்செயின், ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் என்று பல்வேறு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஐடி சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் வந்தாலும், தற்போது குறிப்பிட்டுள்ள புதிய வேலைவாய்ப்புகள் இதில் அடங்காது. அதாவது டிஜிட்டல் மாற்றத்தில் உருவாக்கப்பட்ட வேலைகள் இல்லாமல் வேறு புதிய வேலைகள் உருவாகியுள்ளன என்பது வரவேற்புக்குரியதாக இருக்கிறது.

மேலும் பெரும்பாலான புதிய வேலைகள் அனைத்துமே கல்லூரி படிப்பு முடித்து அனுபவமில்லாத பிரஷ்ஷர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில்தான் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது பெரும்பாலான வேலைகள் டிஜிட்டல் சேவைகளை சார்ந்து அமைந்துள்ளதால் டிஜிட்டல் டேலன்ட்டிற்கு அதிக டிமாண்ட் உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.அது மட்டுமின்றி வணிக வளர்ச்சிக்குத் தேவைப்படும் திறன் உள்ள நபர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளனர். இந்த நிதியாண்டில் இது வரை உருவாகியுள்ள வேலை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பல ஆயிரம் புதிய வேலைகள் உருவாகலாம்.

First published:

Tags: Office