மத்திய அரசின் பாதுகாப்புப் படையில் ஒரு பங்கான கடலோர காவல்படையில் ஆண்களுக்கு என்று பிரத்தியேகமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஐடிஐ முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | கல்வி | வயது |
Sweeper/Safaiwala(தூய்மை பணியாளர்) | 11 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ | 18 வயதிலிருந்து 25 வயது வரை இருக்க வேண்டும். |
சம்பளம்:
பணிக்கு நியமனம் செய்யப்படுபவருக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கான அறிவிப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து சாதாரண தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Commander'(For District Recruitment Officer), No' 1 coast Guard Dist (South Gui' Daman &
Diu), Near RGT College, Post Box No' 25' Porbandar - 360 575 (Gujarat).
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.01.2023
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Jobs