முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : ரூ.81,100 சம்பளத்தில் கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : ரூ.81,100 சம்பளத்தில் கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு

இந்தியக் கடலோர காவல்படை

இந்தியக் கடலோர காவல்படை

Indian Coastal Guard Recruitment : வட மேற்கு கடலோர காவல்படை தலைமையகத்தில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வட மேற்கு கடலோர காவல்படை தலைமையகத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் சாரங் லாஸ்கார் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாரங் லாஸ்கார் என்பது கப்பலில் பணிபுரிவதற்கான பதவி. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் இதோ.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
சாரங் லாஸ்கார்118-30ரூ.25,500 - 81,100/-

கல்வித்தகுதி:

10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

அரசு அங்கீகாரம் பெற்ற நிலையத்தில் சாரங் பதவிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு மூன்று பிரிவுகளில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதார்களில் விண்ணப்பங்களை சரிபார்ப்பது,சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும். ஒரு நிலையில் தேர்வாவதன் மூலம் அடுத்த நிலைக்குச் செல்வர். இறுதியில் தேர்வானவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படும்.

Also Read : மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சுகாதார பணியில் வேலை : விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய கடலோரப்படையில் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பதார்கள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commander, Headquarters,Coast Guard Region(North-West), Post Box No:09, Sector-11,Gandhinagar,Gujarat-382010.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய :

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 17.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs