ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு

இந்தியக் கடலோர காவல்படை

இந்தியக் கடலோர காவல்படை

Indian Coastal Guard Recruitment : இந்தியக் கடலோர காவல்படையின் அந்தமான் & நிக்கோபார் பிரிவில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கடலோர காவல்படையின் அந்தமான் & நிக்கோபார் பிரிவில் உள்ள பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்தியர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்வயது
மோட்டர் வாகன ஓட்டுநர்1ரூ.19,000-63,200/-18-27
சீட் மேடல் பணியாளர்1ரூ.19,000-63,200/-18-27
கார்பெண்டர்1ரூ.19,000-63,200/-18-27
பல்நோக்கு பணியாளர்1ரூ.18,000-56,900/-18-27

கல்வி மற்றும் இதர தகுதிகள்:

மோட்டர் வாகன ஓட்டுநர்10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர், 2 வருட ஓட்டுநர் அனுபவம், மெக்கானிக்கல் திறன்.
சீட் மேடல் பணியாளர்10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழிற்பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 4 ஆண்டுகள் அனுபவம் தேவை.
கார்பெண்டர்10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தேர்ச்சி அல்லது 4 வருட அனுபவம்.
பல்நோக்கு பணியாளர்10 ஆம் வகுப்பு தேர்ச்சி மெக்கானிகல் துறையில் 2 வருட அனுபவம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு முதலில் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களைத் தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் எழுத்துத் தேர்வுக்கு அழைப்பு விடுப்பர். தேர்வு 1 மணி நேரக் காகித எழுத்துத் தேர்வாக அமையும். அதனைத் தொடர்ந்து, தகுதியானவர்களை மெரிட் முறையில் தேர்வு செய்வர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://indiancoastguard.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். படிவத்தை ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் நிரப்பு தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து சாதாரண தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Also Read : ரூ.1.5 லட்சம் சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The commander, Coast Guard Region (A&N), Post Box No.716, Haddo(PO0, Port Blair 744 102, A&N Islands.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 03.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs