பிளஸ் 2 முடித்தவர்களுக்கு கடலோரக் காவல் படையில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோரக் காவல் படை (Indian Coast Guard) ஆயுத படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். இதில் நேவிக் (ஜெனரல் டியூட்டி) – 02/2019 பயிற்சியின் கீழ் பிளஸ் 2 முடித்தவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்தியக் குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: பிளஸ் 2 படிப்பை 10+2 முறையில் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் சலுகை உண்டு.
தேர்வு முறை: தகுதி வாய்ந்தவர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் உரிய பயிற்சிக்குப் பின் பணியில் அமர்த்தப்படுவர்.
கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31. மேலும் விவரங்களுக்கு,
https://images.news18.com/tamil/uploads/2019/01/Notification-Indian-Coast-Guard-Navik-GD-02-2019.pdf என்ற லிங்க்கை பார்க்கவும்.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.