ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய கடலோர காவல்படையில் வேலை... ரூ.19,900/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

இந்திய கடலோர காவல்படையில் வேலை... ரூ.19,900/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

 இந்திய கடலோர காவல்படையில் வேலை

இந்திய கடலோர காவல்படையில் வேலை

Indian Coast Guard Recruitment 2022 | இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணிகளுக்கு தற்போது காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 09/07/2022ம் தேதி கடைசி நாள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்திய கடலோர காவல்படை இந்தியாவின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இதன் பணி கடல் வளங்களைப் பாதுகாப்பது, கப்பல்களைப் பாதுகாப்பது, கடல் வழிக் குடியேற்றத்தைக் கண்காணிப்பது, கடல்வழி போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது ஆகியனவாகும்.

  கடலோரக் காவல்படையானது இந்தியக் கடற்படை, மீன் வளத்துறை, வருவாய் மற்றும் குடியேற்றத்துறை, காவல்துறை போன்றவற்றுடன் ஒத்துழைத்து தன் பணியைச் செய்கிறது. இதில் காலியாக உள்ள பணிகளுக்கு தற்போது காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 09/07/2022ம் தேதி கடைசி நாள்.

  விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.indiancoastguard.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

  வேலைக்கான விவரங்கள் :

  நிறுவனம் / துறைIndian Coast Guard Region (West) (ICGR)
  பணிகள்Motor Transport Fitter, Spray Painter, Motor Transport Mechanic
  விண்ணப்பிக்க கடைசி தேதி09/07/2022
  சம்பள விவரம்Level 2 ஊதிய அளவின் படி, ரூ.19,900/- சம்பளம் வழங்கப்படும்.
  கல்வித் தகுதி விவரம்10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI, Diploma படித்தவராக இருக்க வேண்டும்.
  பிற தகுதிகள்Automobile Workshop-ல் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 02 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  வயது தகுதிகுறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வு.
  மொத்த காலிப்பணியிட விவரம்07 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
  விண்ணப்பிக்கும் முறைOffline மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Written Test, Trade / Skill Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

  வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பினை படித்த பின்னர் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதனை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

  The decision of the Commander, Coast Guard Region (West), Worli Sea Face P.O. Worli Colony, Mumbai – 400 030

  அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

  https://www.indiancoastguard.gov.in

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

  அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

  https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202205310527349841332AdvtMaterial-VY-21forCGwebsite-converted.pdf

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy