இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு... 10-ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு... 10-ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

கோப்பு படம்

Indian Coast Guard Recruitment 2021 | ஜனவரி 19-ம் தேதி மாலை 6 மணிக்குள் joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 • Share this:
  இந்திய கடலோர காவல்படையில் 358 காலிபணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்திய கடலோர காவல்படை பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 19-ம் தேதி மாலை 6 மணிக்குள் joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பின் முழு விவரங்களையும் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

  இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2021

  காலி பணயிடங்கள் - 358
  பொது கடமை - 260
  உள்நாட்டு கடற்படை கிளை - 50
  மெக்கானிக்கல் - 31
  எலக்ட்ரானிக்ஸ் - 10
  எலக்டரிக்கல் - 7

  கல்வி தகுதிகள் : பொது கடமை பணிகளுக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  உள்நாட்டு கடற்பணி பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-ம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

  மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்டரிக்கல் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் டிப்ளாமோ அல்லது தொலை தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  வயது வரம்பு : 18 - 22, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினர் கூடுதலாக 3 ஆண்டுகள் இருக்கலாம்.

  ஆன்லைன் கட்டணம் : ரூ.250 (எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு கட்டண விலக்கு)

  மேலும் முழு தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

  நேரடியாக விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: