தொழில்துறை வளர்ச்சி உதவி மேலாளர், கடன் அலுவலர் மேலாளர், சீனியர் கடன் அலுவலர் மேலாளர் உள்ளிட்ட தொழில் நிபுணத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும்,தகுதியும் உள்ளவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்:
பதவியின் பெயர் |
காலியிடங்கள் |
தொழில்துறை வளர்ச்சி உதவி மேலாளர் |
150 |
கடன் அலுவலர் மேலாளர் |
50 |
சீனியர் கடன் அலுவலர் மேலாளர் |
10 |
இணை மேலாளர் - கணக்குகள் |
05 |
பாதுகாப்பு மேலாளர் |
14 |
உதவி மேலாளர் - IT |
05 |
மொத்தம் |
312 |
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை நாள் : 2022, மே 23
இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2022, ஜூன் 14. அன்றிரவே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.150 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.850 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
கல்வித் தகுதி:
தொழிற்துறை வளர்ச்சி உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடன் அலுவலர் மேலாளர்/சீனியர் கடன் அலுவலர் மேலாளர்/இணை மேலாளர் - கணக்குகள் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டயக் கணக்காளர் ( சிஏ) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பதவிகளுக்கு, தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அந்தந்த பதவிகளுக்கும் ஏற்ப வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுளளது. இதுகுறித்த. முழுமையான விபரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பு: பதிவிறக்கம் செய்ய
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதறபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
Upcoming Bank Exams 2022: வங்கிப் பணிகளுக்கான தேர்வுகள்.. முழுவிவரம் இங்கே
தெரிவு செய்யப்படும் முறை:
வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.
இருப்பினும், பதவியிடங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வருமாயின், எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் www.indianbank.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.