ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு... நவ.25-ம் தேதி கடைசி நாள்

இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு... நவ.25-ம் தேதி கடைசி நாள்

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி

Indian bank Recruitment : இந்தியன் வங்கியில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வங்கித் துறையில் முதன்மை அரசு வங்கியாகச் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பதவியின் பெயர் வயதுகல்வித்தகுதிபணியிடம்
  Chief Digital Officerகுறைந்தபட்சம் 35 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.B.E./ B.Tech மற்றும் MBA படித்திருக்க வேண்டும்.சென்னை

  எதிர்பார்க்கும் தகுதிகள் மற்றும் அனுபவம்:

  Product Management/Project Management/ Analytics / AI/ ML

  / Cloud மற்றும் வங்கியில் டிஜிட்டல் முறை பற்றித் தெளிவு. மேலும் Banking & financial sector இல் 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிக்குத் தகுதியானவர்களை நேர்காணல், குழு விவாதம் போன்றவற்றில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் வங்கி இணையத்தளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்டு அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.indianbank.in/

  தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

  General Manager (CDO), Indian Bank

  Corporate Office, HRM Department, Recruitment Section

  254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.

  விண்ணப்பம் கட்டணம்:

  இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.

  Also Read : மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் 787 காலிப்பணியிடங்கள்..10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

  கட்டணம் செலுத்த வேண்டிய கணக்கு எண்:

  Account Name : Engagement of Chief Digital Officer

  Account Number : 7340439085

  Bank & Branch : Indian Bank, Royapettah

  Account Type : Current Account

  IFSC Code : IDIB000R021

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.11.2022.

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Bank Jobs, Banking jobs, Jobs