Home /News /employment /

Indian Army Recruitment 2022: 12வது படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை!

Indian Army Recruitment 2022: 12வது படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் வேலை

இந்திய ராணுவத்தில் வேலை

Indian Army Recruitment 2022 : இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய விரும்பு நபர்களுக்காக காலிப்பணிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள Clerk, MTS ஆகிய பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் மேனேஜ்மென்ட் (சிடிஎம்) அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான cdm.ap.nic.in இல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மத்திய அரசின் 7வது ஊதியக்கொள்கையின் படி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சட்டப்பிரிவு கிளார்க்:

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது - விண்ணப்பதாரரின் வயது குறைந்தது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். (அரசு ஊழியர்களுக்கு நாற்பது வயது வரையில் தளர்வு உண்டு. பொதுப்பிரிவினருக்கு 45 வயது வரையிலும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசின் அறிவிப்பை பொறுத்து வயது மாறுபடும். )

சம்பளம் - 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி 19,900 முதல் 63,200 வரை ஊதியம் பெறலாம்.

தகுதி - கணினியில் ஆங்கிலம் ஒரு நிமிடத்திற்குள் 35 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சு ஒரு நிமிடத்திற்குள் 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள் : இனிமே வார சம்பளம் தான் - Meesho, India Mart நிறுவனங்கள் அதிரடி..

சட்டப்பிரிவு கிளார்க் பணிகள்:

1. ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது 30 வார்த்தைகள் அளவிற்கு வேகமாக தட்டச்சு செய்ய வேண்டும்.

2. கணினியில் MS-office-யை கையாள நன்றாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். (MS Word,பவர் பாயிண்ட் மற்றும் எம்எஸ் எக்செல்).

3. நிலுவைத் தொகை மற்றும் பிற வருமானங்களை சரியான நேரத்தில் சமர்ப்பித்தல்.

4. முக்கியமான ரசீதுகள், அடுத்த வாரத்திற்கு பயிற்சிக்கு தேவையான பொருட்களை கண்காணித்து தயார் படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மல்டி டாஸ்க் ஸ்டாப்:

கல்வி தகுதி - அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது - விண்ணப்பதாரரின் வயது குறைந்தது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். (அரசு ஊழியர்களுக்கு நாற்பது வயது வரையில் தளர்வு உண்டு. பொதுப்பிரிவினருக்கு 45 வயது வரையிலும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசின் அறிவிப்பை பொறுத்து வயது மாறுபடும். )

சம்பளம் - 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி 18,000 முதல் 56,900 வரை ஊதியம் நிர்ணயம்.

இதையும் படியுங்கள் : பெல் நிறுவனத்தில் வேலை, ரூ.37,500 சம்பளம் - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

MTS பணியாளரின் வேலைகள்:

சுத்தம் செய்தல், கழிப்பறைகள்/பணியிடங்களை துடைத்தல், அலுவலக வளாகம் மற்றும் அலுவலக உபகரணங்களை பராமரித்தல், கோப்புகளை கொண்டு செல்லுதல் போன்ற பணிகள் ஒதுக்கப்படும்.

தேர்வு முறை:

தகுதியுள்ள நபர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப எழுத்து தேர்வு மற்றும் திறனாய்வு மதிப்பீடு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

1. காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் மேனேஜ்மென்ட் (சிடிஎம்) அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான cdm.ap.nic.in உள்நுழைக.

2. முகப்பு பக்கத்தில் “VACANCY IN POST OF LDC & MTS” என்பதை க்ளிக் செய்யவும்.

3. ஒரு PDF ஃபைல் ஓபன் ஆகும், அதில் உள்ள வழிமுறைகளை கவனமாகப் படித்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்.

4. அதில் உள்ள அனைத்து விவரங்களையும் சரியாக படித்து நிரப்பிய பிறகு, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும், விண்ணப்பத்தில் கோரியுள்ள ஆவணங்களையும் இணைக்கவும்

5. விண்ணப்பம் மற்றும் சரியான ஆவணங்களை உறையில் வைத்து சீலிட்டு, த காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் மேனேஜ்மென்ட், சைனிக்புரி, செகந்திராபாத், தெலுங்கானா மாநிலம் - 500 094 என்ற முகவரிக்கு மார்ச் 7ம் தேதிக்குள் சென்றடையும் படி பதிவு தபால் அனுப்பவும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Indian army, Job Vacancy

அடுத்த செய்தி