ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை..!

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை..!

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்திய ராணுவத்தில் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்திய ராணுவத்தில் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்திய ராணுவத்தில் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய ராணுவத்தில் முடித்திருத்துபவர், காவலாள், சுகாதார அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  காலிப்பணியிடங்கள் விவரம்: 

  முடித்திருத்துபவர் - 12

  சுகாதார அலுவலர் - 58

  காவலாள் - 43

  மொத்த : 113

  விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை  http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10622_6_2223b.pdf  இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ்,  கடவுச்சீட்டு (பாஸ்போர்ட் ), நிரந்தர முகவரிக்கான சான்று, பிறப்பிடச் சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட நகல்களை இணைத்து  அனுப்ப வேண்டும்.

  ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள்  விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி

  Presiding Officer (BOO-I),

  HQ Southern Command (BOO-I).

  சுகாதார  அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்போர் தங்கள் விண்ணப்பங்களை

  Commanding Officer,

  431 Field Hospital,

  PIN-903431, c/o 56 APO

  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  பதவியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது, நிர்வாக காரணங்களால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.

  தெரிவு செய்யப்படும் முறை: 

  எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.

  கல்வித் தகுதி: 

  முடி திருத்துபவர், காவலாள் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு  அல்லது அதற்கு சமமான  கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், முடி திருத்தும் பணியில் திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  சுகாதார அலுவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், Sanitary Inspector பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  முடிதிருத்துபவர், காவலாள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 18-25  என்ற வரம்பில் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

  எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Indian army