• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • நாகர்கோவிலில் செப்-15-ல் ராணுவ ஆட்சேர்ப்பு பணி

நாகர்கோவிலில் செப்-15-ல் ராணுவ ஆட்சேர்ப்பு பணி

நாகர்கோவிலில் செப்-15-ல் ராணுவ ஆட்சேர்ப்பு பணி

நாகர்கோவிலில் செப்-15-ல் ராணுவ ஆட்சேர்ப்பு பணி

ராணுவ ஆட் சேர்ப்பு திரளணி, நாகர்கோவில் அறிஞர் அண்ணா மைதானத்தில் வரும் 15.9.2021 முதல் 30.9.2021 வரை நடைபெறவுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சேர்க்கை அட்டை யுடன் கலந்து கொள்ளலாம்.

  • Share this:
    ராணுவ ஆட் சேர்ப்பு திரளணி, நாகர்கோவில் அறிஞர் அண்ணா மைதானத்தில் வரும் 15.9.2021 முதல் 30.9.2021 வரை நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ராணுவ ஆட் சேர்ப்பு திரளணி, நாகர்கோவில் அறிஞர் அண்ணா மைதானத்தில் வரும் 15.9.2021 முதல் 30.9.2021 வரை நடைபெறவுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சேர்க்கை அட்டை யுடன் கலந்து கொள்ளலாம்.

    சிப்பாய் (பொதுப்பணி) பிரிவுக்கு 10-ம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 33 சதவீதம் மதிப்பெண் களும், மொத்த மதிப்பெண் சராசரி 45 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் டெக்னிக்கல் பிரிவுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி. இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் மொத்த மதிப்பெண் சராசரி 50 சதவீதம் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

    ALSO READ |  வங்கியில் கொட்டிக் கிடைக்கும் காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

    சிப்பாய் நர்சிங் அசிஸ்டெண்ட் பிரிவுக்கு கல்வித் தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி. சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் பிரிவுக்கு 12-ம் வகுப்பு இன்டர்மீடியேட் தேர்ச்சி, (கலை, கணிதவியல், அறிவியல்). இவை அனைத்து பணிகளுக்கும், 165 செ.மீ உயரம், மார்பளவு 77 செ.மீ., 5 செ.மீ. விரிவடைய வேண்டும்.

    வயது பதினேழரை முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பாளையங்கோட்டை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    நாளிதழில் வெளியான அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: