• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Indian Army Jobs: எந்தவொரு பரீட்சையும் இல்லாமல் ரூ.2.5 லட்சத்திற்கு வேலை.. இந்திய ராணுவம் வழங்கும் பொன்னான வாய்ப்பு!

Indian Army Jobs: எந்தவொரு பரீட்சையும் இல்லாமல் ரூ.2.5 லட்சத்திற்கு வேலை.. இந்திய ராணுவம் வழங்கும் பொன்னான வாய்ப்பு!

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • Share this:
NCC சிறப்பு நுழைவுத் திட்டத்தின் (Indian Army Recruitment 2021) கீழ் உள்ள பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான ஆண் மற்றும் பெண் நபர்கள், இந்திய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான joinindianarmy.nic.in -ஐ பார்வையிட்டு ஆன்லைனில் பதிவை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவுகளுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை ஜூன் 16 ஆம் தேதி தொடங்கி 2021 ஜூலை 15 ஆம் தேதியுடன் முடிவடையும் எனவும் இந்த ஆட்சேர்ப்பு பணியின் கீழ் மொத்தம் உள்ள 55 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ராணுவத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், Joindindianarmy.nic.in/index.htm என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு (Indian Army Recruitment 2021) நேரடியாக விண்ணப்பிக்கலாம். அதேபோல Joinindianarmy.nic.in/writereaddata என்ற இணையத்தை பார்வையிடுவதன் மூலம் காலிப்பணியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஒருவர் சரிபார்க்கலாம்.

Also Read:   India Post: இந்திய தபால் துறையின் மாதாந்திர வருமான திட்டத்தின் 5 முக்கிய அம்சங்கள்

இந்திய இராணுவ ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: ஜூன் 16
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21

காலிப்பணியிடங்களின் விவரங்கள்:

என்.சி.சி ஆண்: 50 காலியிடங்கள்
என்.சி.சி பெண்: 5 காலியிடங்கள்

விண்ணப்பிக்க தேவையான தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் என்.சி.சியின் மூத்த பிரிவு அல்லது டபிள்யூ.ஜி.யில் குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

Also Read:   இந்தியாவில் அசுர வளர்ச்சியை நோக்கி Gaming துறை! குவியும் முதலீடுகள்

சி.டி.எஸ்.இ வேட்பாளராக சேவை தேர்வு வாரியத்தின் (எஸ்.எஸ்.பி) நேர்காணலுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதை வேட்பாளர்கள் கவனிக்க வேண்டும். அதாவது என்.சி.சி (எஸ்.பி.எல்) நுழைவு -50 பாடநெறி (அக். 2021) அல்லது எஸ்.எஸ்.சி (என்.டி) -114 பாடநெறி (அக். 2021) / எஸ்.எஸ்.சி (என்.டி) (பெண்கள்) -28 பாடநெறி (அக். 2021) ஆகிய இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆன்லைன் விண்ணப்பத்தின் அறிவிப்பு பகுதியின் கீழ் விண்ணப்பதாரர்கள் இந்த முயற்சியை வழங்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேர்வு செயல்முறை:

தேர்வு செயல்முறையில் முதலில் தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர் எஸ்.எஸ்.பி நேர்காணல் நடத்தப்படும். பட்டியலில் தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தில் எஸ்.எஸ்.பி. இரண்டு நிலை தேர்வு நடைமுறை நேர்காணலை சந்திக்க வேண்டும். ஸ்டேஜ் 1 மற்றும் ஸ்டேஜ் 2 ஆகிய இரண்டையும் கிளியர் செய்பவர்கள் பணிக்கு தேர்தெடுக்கப்படுவார்கள். முதல் ஸ்டேஜில் தோல்வியுற்றால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: