வேலூரில் உள்ள காவல் பணிசேர்ப்பு பள்ளியில், இந்திய ராணுவத்தில் மகளிர் அக்னிவீரர்கள் சேர்ப்பதற்கான ராணுவ பயிற்சி முகாம் நடைபெறுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அக்னிவீரர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
பணியின் பெயர்: Agniveer (General Duty) Women in Corp of Military Police
கல்வி தகுதி: 45% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 17½- 23
உயரம்: குறைந்த அளவு 170 செ.மீ.
எடை: உயரத்திற்கு ஏற்றார் போல்.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், ஏனம் மற்றும் புதுச்சேரி) மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகள் (நிக்கோபார், வட மற்றும் மத்திய அந்தமான் மற்றும் தெற்கு அந்தமான்) ஆகிய பகுதிகளில் உள்ள திருமணமாகாத மகளிர் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். உள்ளூர் கிராம பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்பப்ட்ட திருமணம் ஆகவில்லை என்ற சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
இன்று (ஆகஸ்ட் 05) முதல் செப்டம்பர் 7 வரை www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக பெண் தேர்வர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
நவம்பர் 1, 2022 முதல் அனுமதி அட்டைகள் இணைய வழியாக வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்வதற்கான தேதி அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நவம்பர் 1, 2022க்கு பிறகு www.joinindianarmy.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பதாரர் அனுமதி அட்டையை அச்செடுத்துக் கொள்ளலாம்.
பணிசேர்ப்பு நடைமுறை முழுவதும் தானியங்கியாக, நேர்மையானதாக வெளிப்படைத் தன்மையானதாக இருக்கும். முறைகேடுகளில் ஈடுபடுவதை விண்ணப்பதாரர்கள் தவிர்க்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு சென்னை பணிசேர்ப்பு அலுவலகத்தை (தலைமையகம்) 044 25674924 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் வாசிக்க: இலங்கையில் கூடுதலாக பெட்ரோல் நிலையங்களை திறக்க இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அனுமதி
அக்னிபத் திட்டம்: இந்தியாவின் முப்படைகளில் ஆயுதப் படைகளில் இளைஞர்களை பணியில் சேர்ப்பதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, அபாயம் மற்றும் சிரமப்படிகளுடன் ஈர்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் வழங்கப்படும்.
4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரர்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவர்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும்.
மாதாந்திர சம்பளம் | கையில் கிடைக்கும் சம்பளம் (70%) | அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு (30%) | தொகுப்பு நிதிக்கு அரசின் பங்கு | |
All figures in Rs (Monthly Contribution) | ||||
முதலாம் ஆண்டில் | 30000 | 21000 | 9000 | 9000 |
இரண்டாம் ஆண்டில் | 33000 | 23100 | 9900 | 9900 |
3ம் ஆண்டில் | 36500 | 25580 | 10950 | 10950 |
4ம் ஆண்டில் | 40000 | 28000 | 12000 | 12000 |
4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட மொத்த நிதி | Rs 5.02 Lakh | Rs 5.02 Lakh | ||
4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு | ரூ. 11.71 லட்சம்சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் (வட்டியுடன் சேர்த்து) வீரர்களுக்கு வழங்கப்படும் |
முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிர்ணயிக்கப்படும். அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும். 2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும்.
இதையும் வாசிக்க: UGC - NET Exam : யூஜிசி 2வது கட்ட நெட் தேர்வு தேதி அறிவிப்பு
4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு: RECRUITMENT RALLY NOTIFICATION
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agnipath