துணி வெளுப்பர் (Washermen), ட்ரேட்ஸ்மேன் (Tradesman) ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ராணுவ தென் மண்டல தலைமையகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 65
துணி வெளுப்பு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். டிரேடார்களும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய தொழிற் துறைகளில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை நூலகப் பாடவேளை: பள்ளிக்கல்வித் துறையின் புதிய முயற்சி
ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி,
The Commandant,
Military Hospital, Defence Colony Road,
Chennai,
Tamil Nadu, Pin: 600032.
விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பதாரர் விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் மற்றும் கைபேசி எண் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
இதையும் வாசிக்க: அணிகலன் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவரா? ரூ. 1லட்சம் பரிசு அறிவித்த கல்யாண் ஜுவல்லர்ஸ்
சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 ஆகும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர், 18 வயதுக்கு மேலும், 25 வயதுக்கு கீழும் இருக்க வேண்டும்.
தேர்வு நிலை: இதற்கு, எழுத்துத் தேர்வு நடத்தப்படும். பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டிருக்கும்.
DIRECT RECRUITMENT OF CIVILIAN GROUP ‘C’ HQ SOUTHERN COMMANDஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.