ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய ராணுவ விமான பாதுகாப்பு கல்லூரியில் வேலை ... விண்ணப்பிக்க விவரங்களை காண்க

இந்திய ராணுவ விமான பாதுகாப்பு கல்லூரியில் வேலை ... விண்ணப்பிக்க விவரங்களை காண்க

இந்திய ராணுவ விமான பாதுகாப்பு கல்லூரியில் வேலை

இந்திய ராணுவ விமான பாதுகாப்பு கல்லூரியில் வேலை

Indian Army Air Defence College Recruitment 2022 | இந்திய ராணுவ விமான பாதுகாப்பு கல்லூரியில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய ராணுவ விமான பாதுகாப்பு கல்லூரியில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://indianarmy.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறைMinistry of Defence Army Air Defence College
 காலியாக உள்ள வேலையின் பெயர்Laboratory Assistant, Lower Division Clerk (LDC) and Stenographer Gd-II
 விண்ணப்பிக்க ஆரம்ப தேதி05/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதிஅறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (Within 45 days)
சம்பள விவரம்
Laboratory Assistant – Level – 4(ரூ. 25,500-81,100)
Lower Division Clerk (LDC)(ரூ. 19,900-63,200)
Stenographer Gd-II – Level(ரூ. 25,500-81,100)

கல்வித் தகுதிவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன் அறிவியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்03  காலியிடங்கள் உள்ளன.
Laboratory Assistant01
Lower Division Clerk (LDC)01
Stenographer Gd-II01

விண்ணப்பிக்கும் முறை

OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

 விண்ணப்பத் தாரர்கள் written test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் General Intelligence & Reasoning, Numerical Aptitude, General English, General Awareness, Comprehension, Vocabulary, Grammar மற்றும் பாடம் தொடர்பான கேள்விகள் இருக்கும்.

வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Army Air Defence College, Golabandha (PO), Ganjam (District), Odisha – 761052.

முறையான சுய சான்றொப்பமிடப்பட்ட அனைத்து தொடர்புடைய சான்றிதழ்கள்/ஆவணங்களின் நகல் (கீழே பட்டியலிடப்பட்டுள்ளது) விண்ணப்பத்துடன் அவற்றை இணைக்க வேண்டும்.

அசல் சான்றிதழ்கள்/ஆவணங்கள் சரிபார்ப்புக்காக எழுத்துத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் விண்ணப்பதாரர் அனைத்து வகையிலும் தகுதியுடையதாகக் கண்டறியப்பட்டால் அனுப்பபடும்.

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://indianarmy.nic.in/

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10620_1_2223b.pdf

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

First published:

Tags: Job Vacancy