தாம்பரம் விமானப்படை நிலையம் வாயிலாக நாளை மறுநாள் முதல் (பிப்ரவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை) மருத்துவ உதவியாளர் பதவி காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அம்மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமானப்படையின் தாம்பரம் விமானப்படை நிலையத்தில், ஏர்மேன் (Medical Assistant Trade) தேர்விற்கான முகாம் வரும் பிப்ரவரி 1 முதல் 7 வரை நடக்கிறது. இதில் அறிவியல் பிரிவில் பிளஸ் 2 படித்தவர்கள் மற்றும் மருந்தியலில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
பிளஸ் 2 வகுப்பில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். திருமணமாகாத இளைஞர்கள் 27.06.1999 முதல் 27.06.2004ம் தேதிக்குள்ளும், திருமணமான இளைஞர்கள் 27.08.1999 முதல் 2706.2002ஆம் தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 152.5 செ.மீ. உயரம் இருத்தல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, www.armenselection.cdatin என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகியோ அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs