இந்திய விமானப்படையில் ஃப்ளையிங் மற்றும் கிரவுண்ட் டியூட்டி-க்கு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கான கமிஷன் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 2024 ஆம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.சி பிரிவு, பயிற்சி எண் மற்றும் பணியிடங்களுக்கான விவரங்கள் பின்வருமாறு:-
பணியின் விவரங்கள்:
நுழைவு | பிரிவு | படிப்பு எண் | காலிப்பணியிடங்கள் |
AFCAT Entry | Flying | 215/24F/SSC/M & W | 10 |
AFCAT Entry | Ground Duty(Technical) | 214/24T/SSC/104AEC/M & W | AE(L): 97AE(M): 33 |
AFCAT Entry | Ground Duty(NonTechnical) | 214/24G/SSC/M & W | Weapon Systems(WS) Branch: 17Admin: 48LGS: 21Accts: 13Edn: 10Met: 09 |
NCC Special Entry | Flying | 215/24F/PC/M and215/24F/SSC/M & W | 10% seats out of CDSE vacancies forPC and 10% seats out of AFCAT vacancies for SSC |
கமிஷன் வகைகள்:
எஸ்.எஸ்.சி :
எஸ்.எஸ்.சி அதிகாரிகளாகத் தேர்வாகும் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டத்திலிருந்து 14 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.
தரைப்பிர்வில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு முதல் 10 ஆண்டுகள் பதவிக்காலம் வழங்கப்படும். மேலும் இன்னும் 4 ஆண்டுகள் அதிகாரிகளில் விருப்பம் மற்றும் காலிப்பணியிடம் இருக்கும் என்றால் அதிகரிக்கப்படும்.
நிரந்த கமிஷன் அதிகாரியாகப் பதவி உயர்வு, ராணுவ விதிகளுக்கு உட்பட்டது.
பென்ஷன் திட்டம் எஸ்.எஸ்.சி அதிகாரிகள் கிடையாது.
வயது வரம்பு:
பறக்கும் படைக்கு வயது வரம்பு 20 வயதில் இருந்து 24 வயதாக உள்ளது. DGCA அதிகாரப்பூர்வ பறக்கும் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களுக்கு அதிகபட்ச வயது 26 வயதாக உள்ளது.
தரை பணிகளுக்கு வயது வரம்பு 20 இல் இருந்து 26 ஆக உள்ளது.
திருமண விவரம்:
பயிற்சி காலத்தில் பணியாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி கிடையாது.
கல்வித்தகுதி:
பறக்கும் படை:
50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது A & B தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தரை பணி: (தொழில்நுட்பம்)
Aeronautical Engineer (Electronics) {AE (L)} & Aeronautical Engineer (Mechanical) {AE (M)}: 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் பிரிவில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பொறியியல்/தொழில்நுட்பம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் பிரிவுகளுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.
தரை பணி: ( தொழில்நுட்பம் அல்லாத)
ஆயுத அமைப்புகள் (WS) கிளை:
கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் 50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 3 அல்லது 4 ஆண்டுகள் பட்டப்படிப்பு.
நிர்வாகம் மற்றும் தளவாடங்கள்,கணக்கு கிளை, கல்வி மற்றும் வானிலையியல்:
பட்டப்படிப்பு 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
என்.சி.சி சிறப்பு நுழைவு:
என்.சி.சி சிறப்பு நுழைவில் தேர்ச்சி பெற NCC Air Wing Senior Division 'C'சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்குக் கணினி வழி தேர்வு மூலம் 56,100/-தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
சம்பள விவரம்:
இப்பணிகளுக்கு 7வது சிபிசி படி நிலை 10 ரூ.56,100-1,77,500 வரை வழங்கப்படும். MSP ரூ.15,500/- வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ரூ.56,100/- மாத உதவித்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு விவரங்கள்:
AFCAT தேர்வு பிப்ரவரி மாதம் 24,25 அல்லது 26 தேதிகளில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய விமானப்படை பணிகளுக்கு https://afcat.cdac.in/ அல்லது https://www.careerindianairforce.cdac.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022 காலை 11 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian army, Jobs